குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home அரை உறைநிலை கிறீம் = Eisparfait = Parfait = le parfait glacé
« Home »
Feb 24th, 2014 Comments: 0

அரை உறைநிலை கிறீம் = Eisparfait = Parfait = le parfait glacé

Tags

அரை உறைநிலை கிறீம் (‌ஐஸ்?) இது ஓரளவு ‌ஐஸ்கிறீம் போன்றது.

தேவையான பொருட்கள்

250 ml சீனி பாகு (நீரில் கரைத்த சீனி)= läuterzucker = sugar syrup =sirop de sucre
(இதற்கு பதிலாக சீனியை பயன்படுத்தலாம்)
8 முட்டை மஞ்சள்கரு
4 முட்டைவெள்ளை கரு
160 g சீனி
1 Liter பால்கிறீம் = Schlagsahne = whipped cream = crème fouettée
ஒரு சொட்டு உப்பு
200 g அல்லது ml உங்களிற்கு விரும்பிய சுவை

செய்முறை:

முதலில் குளிரூட்டியில் வைத்திருந்த பாலா‌டைகிறீமுடன் 130g சீனியையும் சேர்த்து அடிக்கும் கருவி (Beater) மூலம் அடித்து இறுக்கமான தன்மையாக்கவும்.
இறுகிய பாலாடைகிறீமை குளிரூட்டியில் வைத்திருங்கள்.

குறிப்பு: குளிரற்ற பாலாடைகிறீமை அடிக்கும் போது இறுகுவதற்கு முன் வெண்ணெய் ஆகிவிடும். மற்றும் இறுகிய பாலாடைகிறீமை தொடர்ந்து அடித்தாலும் வெண்ணெய் ஆகிவிடும்.

வெள்ளைகருவையும் மிகுதி சீனியையும் ஒரு பாத்திரத்தில் இட்டு அடிக்கும் கருவி (Beater) மூலம் அடித்து இறுக்கமான தன்மையானதும் குளிரூட்டியில் வைத்திருங்கள்.

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை நன்றாக குறைக்கவும் .
குண்டால பாத்திரத்தில் மஞ்சள்கரு , உப்பு ,சீனி பாகை இட்டு கொதித்த நீரின் மேல் வைத்து
மெதுவாக ஓரளவு கிறீமாகும் வரை அடிகரண்டியால் அடிப்பிடிக்காமல் கலக்கவும்.(அடிக்கவும்)
இறுகிய முட்டைகலவையை மீண்டும் ஒரு குளிர்ந்தநீர் ம‌ே‌ல் வைத்து குளிராகும் வரை கலக்கவும்.
குளிர்ந்ததும் குளி்ரூட்டியில் வைத்திருந்த பாலாடை, வெள்ளைக்கரு கிறீம் மற்றும் உங்களிற்கு விரும்பிய சுவையையும் முட்டைகலவையில் இட்டு மெதுவாக கலக்கவும்.
ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தை எடுத்து அதற்கு நீர் தடவி அதனுள் மெல்லிய கணணாடி பேப்பரை விரிக்கவும்.
கலந்த கலவை அப்பாத்திரத்தில் சமமாக ஊற்றி 4 மணித்தியாலம் உறைநிலையில்
வைக்கவும்.
உறைநிலையடைந்ததும் வெளியில் எடுத்து தலைகீழாக கொட்டும் போது பாணின் வடிவமாகும். இதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறலாம்.

பாலாடை = கிறீம் = cream = Sahne =crème

+++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>