குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home
Mai 21st, 2015 Comments: 0

அஸ்பாரகஸ்( சாத்தாவாரி)= asparagus = spargel = asperges

Tags

Spargelsortenஇந்த பெயா் ஆசியாவில் வாழும் எம் மக்களுக்கு புதுமையான சொல்லாக இருக்கலாம். ஐரோப்பாவில் வாழும் எம்மவர்களிற்கு ஓரளவு தெரிந்திருக்க கூடியது. இளவேனிற் காலம்தான் இதன் அறுவடைகாலமென்பதலால் தற்போது இதைப்பற்றி தர முயற்சிக்கின்றேன். எமது வைத்திய முறையில் இது பயன்படுத்தப்பட்டுக் கொண்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 ஆண்டுகளிற்கு முன் பண்டையகால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது.முன்பு இந்த தாவரத்தின் பருவகாலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டு குளிர்காலத்திற்காகவும் எடுத்துவைக்கப்பட்டது.பின்பு பிரபல்யமாக இல்லாமல் இருந்த இந்த தாவரம், அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பிரபலமாகிவிட்டது.

இது ஒரு தாவரமாக வளரக்கூடியது என்றாலும், உணவைப்பொறுத்த வரை தாவரநிலை தேவையற்றது. இது ஒரு நிலத்திற்கடியில் தண்டாக 2 வருடங்கள் செழுமையாக்கப்பட்ட பின், படர்ந்த கீழ் கிழங்கில், பனம்பாத்திபோல் மேடாக கட்டி மேல் எழுந்துவரும் முளையான தண்டை, மண்ணிற்கு மேல் வளர முன் அறுவடை செய்து உணவாக பயன்படுத்தப்படுகின்றது.

வெள்ளை அஸ்பாரகஸ் சூரிய ஒளி கொடுக்கப்படாமல், புற ஊதா ஒளி அதிகமாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இது பச்சை வகையை விட கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும். இது நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.

வெள்ளை அஸ்பாரகஸ் 10mm தொடக்கம் 18mm வரை விட்டமும் 12cm -22cm நீளமும் கொண்டவை உணவிற்கு உகந்தது. மற்றும் முளையான தண்டை, மண்ணிற்கு மேல் வளர முன் அறுவடைசெய்வது முக்கியமானது. மண்ணிற்கு மேல் வந்துவிட்டால் சமைப்பதற்கு உகந்ததல்ல.வெள்ளை அஸ்பாரகஸ் செய்முறை கடினமானதால் விலை கூடியதாகவிருக்கின்றது.

ஊதா நிற அஸ்பாரகஸ், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ஊதா நிற அஸ்பாரகஸ் இத்தாலியில்தான் துவக்கத்தில் மேம்படுத்தப்பட்டது.

வடமேற்கு ஐரோப்பாவில் உற்பத்திப் பருவம் மிகவும் குறுகியக்காலம் வரைதான் இருக்கும். வழக்கமாக, ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஆரம்பித்து வெயில் காலத்தின் நடுவில் ஆனி மாதம் 24 ஆம் தேதி அளவில் இதன் பருவகாலம் முடிந்துவிடும்.Spargel bild 2Spargel bild 3

பச்சை அஸ்பாரகஸ் மண்ணிற்கு மேல் 12-20 cm வரை வளரவிட்டு அறுவடை செய்யப்படும். மற்றும் சூரிய ஒளி படுவதனாலும் மொட்டு சிறிதளவு விரிவதனாலும் பச்சை நிறமாக அறுவடை செய்யப்படுகின்றது.இது மெல்லியதாக இருக்கும்.உலகளவில் கூடுதலாக பச்சை அஸ்பாரகஸ் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அஸ்பாரகஸ் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மற்றும் நோயை குணமாக்கும் திறனுடையது.
அஸ்பாரகஸில் குறைவான கொழுப்பும் மற்றும் பொட்டாசியம் நிறைந்தும் உள்ளது. மற்றும் மாப்பொருள்,குளுக்கோஸ், நார்சத்து,புரதம், தயமின், விற்றமின் C, விற்றமின் B6, A, B1, B2, E, கல்சியம். இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பொஸ்பரசு போன்ற சத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பச்சை அஸ்பாரகஸில் விட்டமின் சி நிறைந்துள்ளது.

அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர் கூடுதலாக செயல்புரிய வைத்து, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை, நடுநிலைப் படுத்துகிறது. மற்றும் சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார்சத்து மலத்தை இலகுவாக்கின்றது

அஸ்பாரகஸ் ஆசியர்களின் சமையல் பாணியில், பொரியல் வகையைப் போல பொரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள வறுத்த பொரியலாக கோழி இறைச்சி, இறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். இந்த அஸ்பாரகஸ் பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும்.

ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பாவில் அவியவைத்து அல்லது வேகவைக்கப்பட்டு, ஹொலண்டைஸ் (Holandaise)என்ற சோஸ் உடன் அல்லது உருகிய வெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய், பார்மசான் (Parmasan)பால்கட்டி அல்லது மயோனைஸ் ,சைவ மயயோனைச ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும்.

இதனுடன் இணைத்து உலர்த்திய அல்லது பதப்படுத்திய இறைச்சிவகைகள், மீன்வகைகள், இறைச்சி வகைகளுடன் அவித்த உருளைக்கிழங்கும் சேர்த்து பரிமாறப்படுகின்றன.

???????????????????????????????

அஸ்பாரகஸ் உண்பதற்கு தயாராக்கும் படிமுறை.

சீவும்முறை

அஸ்பாரகஸ் தண்டை பெருவிரலுக்கும் சுட்டுவிரலிற்கும் இடையில் முளைத்தண்டு மேல் நிற்குமாறு படிய வைத்து, ஒரு உருழைக்கிழங்கு சீவியால் மேல் முளைத்தண்டில் 2-3 சென்ரிமீற்றர் விட்டு மேலிருந்து அடிவரை மெல்லியதாக மேல் தோலை படிமுறையாக சீவி முடிந்ததும், அடித்தண்டில் 1 சென்ரிமீற்றர் வெட்டவும். எல்லாம் சீவி முடிந்ததும் ஈரதுணியில் சுற்றி வைக்கவும்.

பச்சை அஸ்பாரகஸ் அடித்தண்டில் மாத்திரம் தோலை சீவினால் போதுமானது.

அவிக்கும்முறை

ஒரு தண்டு கொள்ளக்கூடிய பாத்திரத்தில் அளவான நீா் இட்டு தேவையான உப்பிட்டு கொதிக்கவிடவும்.
அத்துடன் ஒரு மேசைக்கரண்டி பட்டர், ஒரு தேக்கரண்டி சீனி, 2 துண்டு தேசிக்காய் (கால்பங்கு) அத்துடன் இருந்தால் இரு கிளை பசுமை மாறா செடி(Rosmarin) இட்டு நீர் கொதித்ததும் படத்தில் காட்டியது போல் அஸ்பாரகஸ் ஐ இட்டு அவிக்கவும்.

வெள்ளை அஸ்பாரகஸ் 15 – 20 நிமிடங்களும் பச்சை அஸ்பாரகஸ் 6 – 8 நிமிடங்களும் அவிய விட வேண்டும்.
அதாவது கூட அவியாமல் இறுக்கமான பதத்தில் அவிந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

குறிப்பு

பிற்பாடு பரிமாற வேண்டுமாயின் கொஞ்சம் முன்னதாக எடுத்து குளிராக்கி வைக்ககவும். சூட்டுடன் வைத்தால் நிறமும் மாறும்.அத்துடன் விற்றமீன்களும் இழக்கப்படும். தேவையான நேரத்தில் அவித்த சாற்றை மீண்டும் கொதிக்க வைத்து சூடாக்கி பரிமாறலாம்.

குறிப்பு

அஸ்பாரக்ஸ் அவித்தசாறு எறியாமல் அந்த சாற்றில் அஸ்பாரக்ஸ் சூப் செய்யலாம்.மற்றும் ஹொலண்டைஸ சோஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Sparger bild1???????????????????????????????

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>