குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 18th, 2014 Comments: 1

இறைச்சிவகைகள் = Fleisch = Meat = viande

Tags

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான விலங்குகளை உணவாக உட்கொள்கின்றார்கள். இவற்றில் கோழி, ஆடு, மாடு, பன்றி, போன்றன கூடுதலான
நாடுகளில் உணவாக்கப்படுகின்றபடியால் அவற்றை முதலில் தெரிந்துகொள்வோம்.

எங்களை பொறத்தவ‌ரை கோழிஇறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறச்சி, பன்டிறைச்சி என
மடடுமே பெரும்பாலானவர்கள் அறிந்து ஒன்றாக சமைத்து உணவாக உண்கின்றோம்.
ஆனால் மேற்குலக நாடுகளில் அல்லது அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு பாகங்களையும் பிரித்து ,சமைக்கும் முறைகள் , ‌தயாரிக்கும் நேரம் உன வகுத்து உண்கின்றார்கள். மற்றய ஒரு பகுதியில் படங்களுடன் விபரிக்க முயற்சிக்றேன்

விலங்கின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. சில பாகங்கள் பச்சையாகவும் ,சில குறைந்த நேர தயாரிப்பிலும், சில நன்றாக அவித்தும்
உண்ணக்கூடியதாகவும் இருக்கின்றன.

மற்றும் எங்களைப்போன்று விலங்கை கொன்ற உடனேயே துப்பரவாக்கி சமைத்து உண்ணும் முறை மேற்குலக நாடுகளில் அல்லது அமெரிக்க நாடுகளில் இல்லை.
விலங்கொன்று கொல்லப்பட்ட பின் அதன் தசைகள் இறுகம‌டைந்து விடுகின்றன.
உடனேயே சமைக்ககும் போது இன்னும் இறுகி சவ்வு தன்மையாகிவிடுகின்றன.
இதனால் ஒவ்வொரு விலங்கும் கொன்றபின் ஒவ்வொரு காலஎல்‌லை ‌வரை குளிர் அறையில் வைத்த பின்தான் சமைப்பதற்கு தயாராகின்றது. இதனை பழுக்க விடுதல்
என அழைக்கப்படுகின்றது.

கோழி 2 நாட்கள்
ஆடு 7 – 10 நாட்கள்
மாடு 10 – 14 நாட்கள்
மாட்டுகன்று 5 – 7 நாட்கள்
பன்றி 4-5 நாட்கள்
காட்டுவிலங்குகள் 21 நாட்கள்

வரை குளிர் அறையில் தொங்கவிட்டு பதமாக்கி பிரித்து உண்பார்கள்.

அத்துடன் இப்படி பழுக்கவிடும் பொது தசைகள் மென்மை அடைந்து சுவையும் கூடுகின்றது.

இறைச்சி வகைள் பலவிதமாக பாதுகாத்து வைக்கப்படுகின்றது.

1. குளிர்சாதன பெட்டியில் குறுகிய காலத்தல் 0 – 4 பாகை யிலும்
2. உறை நிலையில் 3 – 6 மாதகாலங்களில் – 18 – 22 பாகை வரையிலும்
3. புகையூட்டி காய்ந்த நிலையில் பல மாதங்களும்
4.எண்ணெய் வகைகளில் இட்டு பதப்படுத்தி ஒரிரு வாரங்களிலும்
5.உப்பு , மூலிகை போன்றவற்றால் பதபடுத்தி பல மாதமளவிலும்

பாதுகாக்கபடுகின்றது. அத்துடன் 85 வீத ஈரலிப்பு தன்மையிலும் , தொங்கவிட்டும்,
மரக்கறி , பழங்கள், முட்டை வகைகளில் விலத்தி வைத்தும் சேமிக்கப்படுகின்றது.

மற்றும் ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் வாழ்காலங்களை கணிப்பிட்டு ஒவ்வொன்றின் பெயர்கள் மாறுபடுவதுடன் அவற்றின் பகுதிகளின் தயாரிக்கும் ‌கால எல்லைகளும் மாறுபடுகின்றன.

பன்றி = Pork = Schwein = le Porc
ஆடு = schaf / lamm = sheep /Lamb / mutton = mouton/ agneau

}}}}

Comments

( 1 )
  1. everything Aug 13th, 2017 11:34

    Greetingѕ! Very helpful advice within this article! It is the little changes that produce the most important
    changes. Many thanks for sharing!

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>