குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Mai 10th, 2014 Comments: 1

கத்தரிக்காய் = Eggplant or Brinjal = Aubergine = l Aubergine

Tags

கத்தரிக்காய் = Eggplant or Brinjal = Aubergine = l Aubergine

இதன் தாயகமாக தெற்காசியா கருதப்படுகிறது. எமது நாடுகளில் பல விதமான நிறங்கள், வடிவங்களில் கிடைத்தாலும், ஐரோப்பாவில் நாவல் நிறத்தில்தான் கிடைக்கின்றது. 15 ஆம் நுாற்றாண்டில் இருந்து தான் அரேபியர்களால் ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. இத்தாலி, ஸ்பானியா, பிரான்ஸ், துருக்கி,கிரேக்கம் போன்ற நாடுகளில் பெரும்பாலும் பாவிக்கப்பட்டாலும் மற்றய நாடுகளில் அண்மைக்காலங்களில்தான் பிரபல்யமானது எனலாம். ஆனால் கொலண்ட் நாட்டில் தற்போது கூடுதலாக பயரிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 80 வீதம் நீராக இருந்தாலும் விற்றமின் C, B மற்றும் கல்சியம் ,புரதம், நார்சத்து , இரும்புசத்து நிறைந்ததாகும். எமது முன்னோர்கள் இறைச்சிவகைகள் சமைக்கும்போது முக்கியமாக கத்தரிக்காய் கறி வைப்பது உங்களிற்கு நினைவிருக்கலாம். ஆனால் அதில் மிக கூடிய அனுகூலமாக இருப்பது சுவையை விட , கத்தரிக்காயில் கொழுப்புசத்தை குறைக்க கூடிய திறன் இருப்பதே.

பிரான்ஸ் ‌சமையலில் ratatouille, துருக்கி நாட்டில் karnıyarık, İmam bayıldı , இத்தாலியில் parmigiana di melanzane, கிரேக்கத்தில் moussaka , அரபுநாடுகளில் baba ghanoush , வட இந்தியா ,பாக்கிஸ்தானில் baingan ka Bhartha ,தென் இந்தியாவில் சாம்பார் என ஒவ்வொரு நாட்டிலும் பிரபல்யமான உணவுகளில் பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. பிறிதொரு பகுதியாக இவ்வுணவுகள் சமைக்கும் முறையினை பார்ப்போம்.

aubergine 1

*Ratatouille = றற்ரறுஃலி

++++++++++

Comments

( 1 )
  1. Michael Nov 18th, 2017 4:25

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>