குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home குடைமிளகாய் – இறால் கூட்டுடன் (Ragout) பஸ்மதி சோறு.
« Home »
Mrz 10th, 2014 Comments: 0

குடைமிளகாய் – இறால் கூட்டுடன் (Ragout) பஸ்மதி சோறு.

Tags

குடைமிளகாய் – இறால் கூட்டுடன் (Ragout) பஸ்மதி சோறு.
Shrimp – Bell Pepper Ragout with basmati rice = Shrimp – Paprika-Ragout mit Basmati-Reis=Crevettes – Poivron ragoût avec du riz basmati

நான்கு பேருக்கு

தேவையான பொருட்கள்:

1Kg குடைமிளகாய் = Paprika = Bellpepper = Poivre
500g இறால்
100g வெங்காயம்
100g லீக்ஸ்
200g தக்காளி
50 g வெண்ணைய் Butter = beurre
50 g மா
25 g உள்ளி
25 g மூலிகை கூட்டு (விபரம் கீழே)= kräuter = herbs = herbes
200 ml மரக்கறி சாறு (இருந்தால்) அல்லது பால் (விபரம் கீழே)
200 ml பாலாடை = Sahne =double cream = crème à double
50 ml எண்ணெய்
10g வோக்கோசு = (parsley = persil)
அத்துடன் உப்பு , மிளகுதுாள் , சிறிதளவு சீனி, தேசிக்காய் சாறு,

300 g பஸ்மதி அரிசி

1. செய்முறை

    பஸ்மதி அரிசியை ஒரு பாத்திரத்தில் இட்டு குளிர் நீரால் மெதுவாக அலசி 3-4 தரம் கழுவிய பின் தேவையான அளவு குளிர்நீர் நிரப்பி சிறிதளவு உப்பிட்டு அடுப்பில் வைத்து அவியவிடவும்.
    நீருடன் அரிசி கொதித்து ,அரிசி நன்றாக அவியாமல், அரிசி பதமாகவே (70%) வடிசட்டியில் ஊற்றிய வுடன் ஒரு துணியால் அல்லது அலுமேனிய தாளால் இறுக்க மூடி சட்டியின் மேல் வைத்து ஒரு பக்கத்தில் வைக்கவும்.(எக்காரணம் கொண்டும் குளிர்நீரில் ஊற்ற கூடாது). மற்றய செய்முறை நிறைவேறும் நிலையில் சோற்றை மெதுவாக வேறொரு பாத்திரத்தில் கொட்டி முள்ளுகரண்டியால் கிளறிவிடவும்.
    சோறு ஒட்டாமல் உளிரும் நிலையில் இருக்கும்.

2. செய்முறை

    முதலில் வெங்காயம் , உள்ளி போனறவற்றை சுத்தம் செய்வதுடன் மற்றய மரக்கறிவகைகளை நீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.
    இறாலை சுத்தம் செய்து நீரைவடியவிடவும்
    குடைமிளகாயை சுத்தம் செய்து 3cm துண்டுகளாக வெட்டவும்.
    உள்ளி,வோக்கோசு வெங்காயத்தை சுத்தம் செய்து குறினி துண்டுகளாக வெட்டவும்.
    லீக்ஸை சுத்தம் செய்து 1cm துண்டுகளாக வெட்டவும்.
    தக்காளியை நான்கு பாகமாக வெட்டி விதை மற்றும் நீர் பகுதிகளை அகற்றி 1cm துண்டுகளாக வெட்டவும்.

3. செய்முறை

    சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில் இறாலையும் ஒரிரு நிமிடங்களில் குடைமிளகாய், இட்டு வதக்கவுடன் வெங்காயம் ,உள்ளி, தக்காளி இட்டு தொடர்ந்து வதக்கவும்.

குறிப்பு :

    சட்டியை நல்ல சூட்டில் வைத்திருந்தால் நன்று. ஏனெனில் குறைந்த சூட்டில் இருந்தால் பொருட்கள் வதங்காமல் அவியும் தன்மையாகி சாறு உருவாகும்.)
    ஓரளவு இறாலும் மிளகாயும் அவியும் நிலையில் சட்டியை அடுப்பில் இருந்து விலக்கி வெண்ணையை இட்டு இளகியதும், மாவை சேர்த்து கலந்து , மீண்டும் அடுப்பில் வைத்து எழும்பு அல்லது மரக்கறி சாறு (இருந்தால்) அல்லது பாலை இட்டு கலக்கியால் கலக்கவும். அத்துடன் மிளகு, சீனி, உப்பு ,சிறிதளவு தேசிக்காய் சாறு ஐயும் இடவும்.பாலுடன் சூடாகும் போது தடித்த கூழான சோஸ் உருவாகும்.

    அதன்பின் மூலிகை கூட்டை இட்ட பிற்பாடு பாலாடையையும் இட்டு சுவைபார்க்கவும். தேவையேற்படின் பாலாடை,உப்பு , மிளகுதுாள் மேலும் சேர்க்கலாம். கொதித்ததும் அடுப்பில் இருத்து இறக்கியதும் வோக்கோசு வை மேல் துாவி கலந்துவிடவும்.

    ஓரு தட்டை கோப்பையில் , தேநீர் கோப்பையில் சோற்றை நிரப்பி ஓரு பகுதியில் இட்டு, மறு பகுதியில் குடைமிளகாய் – இறால் கூட்டை வைத்து ஏதாவது மூலிகை கிளை தேசிக்காய் துண்டை வைத்து பரிமாறலாம்

*மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes
*பெஸமெல் சோஸ் : Bèchamel sauce : Bechamel sauce: sauce Béchamel
*மரக்கறி சாறு (கஞ்சி) = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumes
]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>