குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Mrz 10th, 2015 Comments: 0

குவார்க் உருண்டை / quark pellet / quark bällchen/quark boulette

Tags

20150103_180204
தேவையான பொருட்கள்:

30 உருண்டைகள் தயாரிக்கும் நேரம் அரை மணித்தியாலம்.

250g குவார்க்/ quark
125g சீனி
2 முட்டை
1 தேக்கரண்டி வணில சீனி /Vannila suger
250g வெள்ளை மா
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் baking powder
அரை தேக்கரண்டி உப்பு
மற்றும் பொரிப்பதற்கான தாவரஎண்ணெய்
பிரட்டி எடுப்பதற்கு சீனியும்

செய்முறை:

1. ஒரு சுத்தமான பாத்திரத்தில் சீனி,முட்டை ,வண்ணிலசீனி, உப்பு , பேக்கிங் பவுடர் இட்டு நன்றாக
அடித்து கலக்கவும்.
2. பிற்பாடு குவாா்க் ஐ கலக்கவும்.
3. நன்றாக கலந்த பின் மாவை இட்டு மெதுவாக கலக்கவும்.
20150103_172658
4. ஒரு குண்டால சட்டியில் எண்ணைய் இட்டு சூடாக்கவும்.

குறிப்பு: கூடிய கொதிநிலை கூடாது. ஏனெனில் தொடர்ந்து பொரிக்கும் போது கெதியில் கருகி உள்ளிற்குள் வேகாமல் போய்விடும். 170 பாகை நிலை நன்று.

5.இரண்டு சிறிய தேக்கரண்டியை எடுத்து, ஒரு கரண்டியில் குளைத்த பசையை அளவாக எடுத்து, மற்றயகரண்டியால் வெட்டி மெதுவாக கொதித்த எண்ணெயில் போட்டு, மண்ணிறமாகவும் உள்பகுதி வேகும் வரை பொரித்து எடுத்து, ஒரு தட்டில் கடுதாசி தாளின் மேல் வைக்கவும்.

20150103_172847
குறிப்பு: சிறிய அளவு உருண்டையாக இடைவெளி நன்றாக விட்டு பொரிக்கவும். ஏனெனில் எண்ணையில் போட்டதும் உருண்டை பொங்கி பெரிதாகும். மற்றும் ஒரு கரண்டியால் பல முறை உருண்டையை திருப்பி விடவும். கூடியளவு உருண்டைகள் போட்டு பொரித்தால் பொரியாமல் குலைந்து விடும்.
படத்தில் காட்டியது போல் இடைவெளி விட்டு பொரித்து எடுக்கவும்.
20150103_173032

6. பொரித்த உருண்டைகளை சீனியில் போட்டு பிரட்டி பரிமாறலாம்.

20150103_180146

குறிப்பு:குவாா்க் கிடைக்காவிடத்து தயிரை பயன்படுத்தி தயாரிக்கலாம். சிறிதளவு மா கூட போடவேண்டும்.ஆனால் குவார்க் பாவிப்பது போன்று சுவை இராது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>