குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Dez 17th, 2013 Comments: 2

சிக்கன் நூடில்ஸ் ஆசியா ( Pasta Asia ; Pâtes Asie)

Tags

நான்கு பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

காய்ந்த நுடில்ஸ் 400g
கோழி நெஞ்சுப்பகுதி 300g
கரட் 200g
லீக்ஸ் 200g
சிவப்பு குடை மிளகாய் 200g
சோயாமுளை 100g
மிளகு சிறிதளவு
வெங்காயம் 30g
உப்பு தேவையேற்படின் (சோயா சோஸ் உப்புதன்மையானது)
சோயா சோஸ் 3 மேசைகரண்டி
சீனி 1 மேசைகரண்டி
எண்ணெய் 5 மேசைகரண்டி
வோக்கோசு 10g (parsley persil)
கறிதூள் 1 தேக்கரண்டி

செய்முறை

நூடில்ஸ் அவிப்பதற்கு நீரை உப்பிட்டு கொதிக்கவிடவும்.
மரக்கறிவகைகளை சுத்தம் செய்து நீரில் கழுவி வடியவிடவும். பின் 5 சென்றிமீற்றர் அளவில் மெல்லியகீற்றாக வெட்டி வைக்கவும்

கோழியின் நெஞ்சுபகுதியை சுத்தம் செய்து 5 * 1சென்றிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.

வோக்கோசை நன்றாக குறுணியாக வெட்டவும்

கொதியும் நீரில் நூடில்ஸை இட்டு அவியவிடவும்.(குறிப்பு நன்றாக அவியவிடாமல் ஒரு பதத்தில் வடியவிட்டு சிறிதளவு எண்ணையில் கலக்கவும்.)

நூடில்ஸ் அவியும் நேரத்தில் ,ஓரளவு குழியான pபானை (Pan) ஓரளவு நன்றாக சூடாக்கவும்.
( குறிப்பு ஏனெனில் சூடாகாத pபானில் இறைச்சியை இடும்போது வறுகாமல் சட்டியில் ஒட்டிக்கொள்ளும்.)

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில் இறைச்சியை பரந்து சட்டியில் இடவும்.
(குறிப்பு இறைச்சி ஓரளவு வறுத்து வரும்வரை கரண்டியால் கிளறவேண்டாம்.)

ஓரிரு நிமிடங்களில் வெங்காயம் ,கரட்டை இடவும். அதன்பின் மிளகாய் ,சோயாமுளை ,லீக் ஐ இட்டு வதக்கவும். சிலநிமிடங்கள் சென்றதும் கறித்தூள், சீனி , வோக்கோசு ஐ இட்டு கலந்து பிரட்டவும்.
பிரட்டியவுடனே நூடில்ஸை இட்டு அதன் மேல் சோயா சோஸை ஊற்றி நன்றாக கலந்தபின் ஓரிரு நிமிடங்களில் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம்.

குறிப்பு : கோழியின் நெஞ்சுப்பகுதி குறுகிய நேரத்தில் அவியும் தன்மை கொண்டது. மற்றும் உங்களுக்கு விரும்பிய மரக்கறிவகைகள் அல்லது நூடில்ஸ்வகைகளை மாற்றிகொள்ளலாம்

நூடில்ஸ் Pasta

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Comments

( 2 )
  1. kuruparan Jan 20th, 2014 10:00

    வோக்கோஸ் என்றால் என்ன?

    • nElan (Admin) Jan 20th, 2014 15:11

      மல்லி இலை போன்ற ஒரு மூலிகை. ஆங்கிலத்தில் persil என்று ‌அழைக்கப்படுகின்றது

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>