குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Sep 7th, 2014 Comments: 0

சீமை சுரைக்காய் = courgette = Zucchini

Tags

zucchini 1இது ஒருவகை பூசணிக்காய் இனமாக கருதப்படுகின்றது. இதன் தாயகம் ‌ ஐரோப்பா எனவும்,17 ஆம் நுாற்றாண்டில்இருந்து இத்தாலி முதல் அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா முதல் கொண்டு பயிரிடப்படுகின்றது. ஆசிய நாடுகளில் அவ்வளவாக பிரபல்யமற்றது. பெரும்பாலும் வீட்டுத் தோட்டத்தில்
பயிரிடப்படுகின்றது.கொடியற்ற நிலத்துடன் வளரக்கூடியது.

மஞ்சள் பூவுடன் தளிர்த்து10 -30 cm நீண்ட வடிவம் கொண்ட மஞ்சள், குருத்துப்பச்சை, கடும்பச்சை போன்ற நிறங்களில் கிடைக்கப்படுகின்றது. 100 – 300 g அளவில், சித்திரையில் தொடங்கி ஆனி முதல் ஐப்பசி காலங்களில் கூடுதலாகவும் கிடைக்கின்றன.
zucchini 4

பச்சையாகவோ அல்லது சமைத்து உண்ணக்கூடியது.மஞ்சள் பூவுடன் இருக்கும் இளங்காயானது மிகவும் சுவையுடையதும், சத்து நிறைந்ததாகும்.
100 கிராம் சீமை சுரைக்காயில் 80 kJ கொண்டிருக்கும்.
93 g நீரும், மாப்பொருள் 2.2 g, 1.6 கிராம் புரதம், 1.1 g நார்ச்சத்து, 152 mg பொட்டாசியம், 30mg கால்சியம், 25mg பாஸ்பரஸ், 3 mg சோடியம், 1mg இரும்பு,மற்றும் விட்டமின் A,C நிறைவாக கொண்டது.

பிடுங்கப்பட்ட சீமை சுரைக்காய் 10 – 12 நாட்கள் 8 பாகையில் களஞ்சியப்படுத்தகூடியது. ஆனால் பறித்த சில நாட்களில்உபயோகப்படுத்துவது மிகசிறந்தது. நாட்கள் செல்ல செல்ல கசப்ப தன்மை கூடி சுவையற்றதாகிவிடும். பழுத்த காயானது உபயோகத்திற்கு உகந்ததல்ல. மற்றும் தக்காளி, அப்பிள் போன்றவற்றுடன் சேர்த்து வைத்தால் கெதியில் பழுக்க உந்தப்படும்.

ஐரோப்பிய உணவுவகைகளில் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது.

பிரஞ்சு உணவான Ratatouille ஒரு பகுதி மூலப்பொருளாகவும்
(கீள் உள்ள Link ஐ பார்க்கவும்)

இத்தாலி,ஸ்பெயின் உணவான Antipasti யில் வதக்கிய ஒரு பகுதியாகவும் ,
துருக்கி mücver இல் முட்டை மாவில் தோய்து பொரித்து தயிருடனும்,
கிரேக்கத்தில் feta சீஸ் (பாலாடைக்கட்டி) உடன் ofen இல் வெதுப்பியும் மற்றும் வேறு பல முறைகளில் சமையலில் பயன்படுத்தபடுகின்றது.

எமது சமையல் முறைகளில் பாவிப்பதற்கு ஏற்றது. பூசணிக்காய்
பாவிக்கும் முறைகளில் உபயோகப்படுத்தகூடியதாகும்.
தோலுடனோ அல்லது தோலை சீவியோ பாவிக்கலாம்.முத்திய காயில் உள்பகுதி அகற்றி பயன்படுத்துவது சிறந்தது.பிஞ்சு காய்களில் அகற்றவேண்டியதில்லை.

வருங்காலங்களில் மேலும் பலவயைான உணவு வடிவங்களில்
தர முயல்கின்றேன்

Ratatouille = றற்ரறுஃலி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>