குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 12th, 2014 Comments: 0

சைவ உருளைக்கிழங்கு சலாட் = Kartoffelsalat= Potato salad =salade de pomme

Tags

=vegetarisch Kartoffelsalat=vegetarian potato salad = salade de pommes de terre végétarien

தேவையான பொருட்கள்:

1 Kg இறுக்கமான உருளைக்கிழங்கு
100 g குறுனியாக்கிய வெங்காயம்
300 g சிவப்பு குடைமிளகாய் = Paprika = Bellpepper = Poivre
200g தக்காளி = Tomaten = Tomatoes= Tomates
50g ஒலீவன் காய்
50ml ஒலீவ் எண்ணெய்
20g பூண்டு= Knoblauch= Garlic =ail
1 தேக்கரண்டி விநாகிரி அல்லது தேசிக்காய் சாறு
1 தேக்கரண்டி கடுகுபசை = Senf = mustard = moutarde
1 தேக்கரண்டி மூலிகைகூட்டு = kräuter = herbs = herbes ( மூலிகைக்கூட்டு செய்முறையை பார்க்கவும்)
20 துளசி : Basilikum : basil : basilic
அத்துடன் மிளகுதுாள் , உப்பு

முதலில்உருளைக்கிழங்கை தோலுடன் கழுவி ஒரு பாத்திரத்தில் இட்டு உப்பு கலந்து அவித்துவடியில் கொட்டவும்.

குறிப்பு: எக்காரணம் கொண்டும் குளிர்நீரை கிழங்கின் மேல் ஊற்ற கூடாது.

அவித்த கிழங்கை அப்படியே ஆறவிட்டு தோலை உரித்து சிறு துண்டாக வெட்டி
வைக்கவும். (ஆறவிட வேண்டிய அவசியமில்லை)

முதலில் வெங்காயம் , உள்ளி போனறவற்றை சுத்தம் செய்வதுடன் தக்காளி, குடைமிளகா‌யைநீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.

குடைமிளகாய்,வெங்காயத்தை அரை‌ சென்ரிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.
உள்ளி ,துளசி மற்றும் குறுனியாக வெட்டிவைக்கவும்.

தக்காளியை நான்கு பாதியாக்கி உட்பகுதியில் இருக்கும் சாறு,விதைகளை அகற்றியும், மற்றும் ஒலீவன்காயும்
அரை‌ சென்ரிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.

சூடான சட்டியில் அரைபகுதி எண்ணையை இட்டு சூடானதும் சிவப்புகுடைமிளகாய், உள்ளி ,வெங்காயத்தை இட்டு ஓரளவு வதக்கி இறுதியில் மற்றும் ஒலீவன்ககாய் , தக்காளியை இட்டு கலந்தவுடனயே அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

வதக்கியதை ஒரு பாத்திரத்தில் இட்டு மிகுதி ஒலீவ்எண்ணெய்,விநாகிரி அல்லது தேசிக்காய் சாறு, கடுகுபசை, மூலிகைகூட்டு,அத்துடன் தேவையான அளவு மிளகுதுாள் , உப்பை இட்டு நன்றாக கலக்கவும்.

கலக்கிய கூட்டை உருளைக்கிழங்கின் மேல் கொட்டி மற்றும் அரைபகுதி துளசியையும் இட்டு நன்றாக கலந்து சுவை பார்க்கவும். தேவையேற்படின் மிளகுதுாள் , உப்பு மேலதிகமாக இடவும்.

கலந்த உருளைக்கிழங்கு சலாட்டை வேறு ஒரு பாத்திரத்தில் இட்டு அதன் மேல்
மிகுதி துளசியை துாவிவிடவும்.

இவ் சலாட்டுடன் உங்களிற்கு விரும்பிய வேறு பொருட்களை சேர்த்து சுவையை மெருகூட்டலாம்.
உதாரணங்கள்: மயோனைஸ, வறட்டிய இறைச்சி, ரின்மீன், இலைவகைகள்

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

*ஓமம் : துளசி : Basilikum : basil : basilic

*****

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>