குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home சைவ பனகோற்ற உடன் சீனிபாணி சோஸ் ம் பழங்களும் = vegetarian Panna cotte with caramel sauce and Fruits = mit Karamell sauce Früchte =de sauce au caramel et fruits
« Home »
Jun 24th, 2014 Comments: 0

சைவ பனகோற்ற உடன் சீனிபாணி சோஸ் ம் பழங்களும் = vegetarian Panna cotte with caramel sauce and Fruits = mit Karamell sauce Früchte =de sauce au caramel et fruits

Tags

veg Panna-cottaஇது ஒரு இத்தாலிய பழவகை உணவு.

தேவையான பொருட்கள்:

500ml பாலாடைகிறீம் = Schlagsahne = whipped cream = crème fouettée
8 g அகார் அகார் = agar agar ( இது கடல் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது .)
50g சீனி
1 வண்ணிலதண்டு = vanilla bean = Vanilleschote = gousse de vanille அல்லது 25g வண்ணில சீனி
ஒரு சொட்டு உப்பு
ஒரு தேக்கரண்டி தேய்தெடுத்த தோடம்பழ ‌மடல்
மற்றம் உங்களுக்கு விரும்பிய பழத்துண்டுகள்

குறிப்பு:

பாலாடைகிறீம் இல்லாவிடத்து பசுபால் அல்லது தேங்காய் பாலையும் பயன்படுத்தலாம். பசுப்பால் பாவிக்கும் போது ஜெலட்டின் தகடு அல்லது அகார் அகார் சிறிதளவு கூட சேர்க்கவேண்டும்.

செய்முறை 1:

அடுப்பில் ஒரு அளவான சட்டியை ‌ வைத்து பாலாடை கிறீமை இடவும்.
வண்ணிலதண்டை நீள்பக்கமாக கீறி வண்ணில பசையை ஒரு சின்ன கரண்டியால் வளித்து பாலாடை கிறீமில் இடவும். அத்துடன் 50gசீனியையும் , உப்பு ,தேய்தெடுத்த தோடம்பழ ‌மடல்
இட்டு காய்ச்சவும்.
கொதித்த சிறிதளவு நீரில் அகார் அகார் ஐ இட்டு கலக்கவும்.

கிறீம் கொதித்தவுடன் கொதித்த பாலாடை கிறீமில் நீரில் கலந்த அகார் அகார் ஐ இட்டு மெதுவாக கலந்து ஒரு முறைகாய்ச்சவும்.
கொதித்த கிறீமை அளவான ‌வழுவழுப்பான சிறு கப்பில் இட்டு குளிருட்டியில் 2 மணித்தியாலங்கள் வைக்கவும்.

குறிப்பு: தேவையாயின் முழுவதுமாக ஓரு ‌வழுவழுப்பான பாத்திரத்தில்
இட்டும் வைக்கலாம். இட முன் பாத்திரத்தின் அடிப்பகுதியில் பொலித்தின் பேப்பரை விரித்து அதன்மேல் இடவும். குளி்ரூட்டிய பின் எடுத்துபரிமாற இலகுவாக இருக்கும்.

சோஸ் செய்முறை :

தேவையான பொருட்கள்:
100g சீனி
2 மேசை கரண்டி நீ‌ர்
15 ml பாலாடைகிறீம் = Schlagsahne = whipped cream = crème fouettée

இன்னொரு சட்டியில் 2 மேசை கரண்டி நீ‌ரையும் , மிகுதி சீனியையும் இட்டு
மெல்லிய சூட்டில் மண்ணிறம் வரை கரண்டியால் மெதுவாக காய்ச்சவும்.
நிறமானதும் அடுப்பில் இருந்து எடுத்து அத்துடன் பாலாடைகிறீமை கலக்கவும்.
குறிப்பு: பாலாடைகிறீம் இங்கு தவிர்க்கலாம். ஆனால் சோஸ் குளிர்ந்து வரும் போது இறுக்க மடைவதை தவிர்க்கவே பாலாடை கிறீம் சேர்க்கப்பட்டுள்ளது.

பரிமாறும் முறை:

குளிர்ந்த கீறிமை ஒரு மெல்லிய சிறு கத்தி அல்லது தகட்டால் கோப்பையின் விளிம்பின் ஊடாக செழுத்தி, cup உடனான கிறீ‌மின் ஒட்டும் தன்மையை விலத்தி, ஓரு கோப்பையில் தலைகீழாக கொட்டவும்.
கொட்டிய கிறீமின் மேல் அழகான முறையில் சோஸை ஊற்றவும். அத்துடன் உங்களிற்கு விரும்பிய பழத்துண்டுகளை அழகாக அடுக்கி பரிமாறலாம்.

=================================================================================

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>