குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Dez 15th, 2014 Comments: 0

சைவ மயோனைசே =Vegan mayonnaise = mayonnaise végétalienne

Tags

vegane mayoஇது ஒரு விரைவான உணவுகளிற்கு பயன்படுத்தப்படும் குளிரான சோஸ் (sauce)வகையாகும். மயோ (Mayo) என சுருக்கமாக அழைக்கப்படும் இதன் பூர்வீகம் ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான Mahón என கருதப்படுகின்றது.

பெரும்பாலானவர்கள் இது பாலில் இருந்துதயாரிக்கப்படுவதாக நினைக்கின்றார்கள். இதற்கும் பாலிற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. இதன் மூலப்பொருட்களாக முட்டை மஞ்சள்கரு 7 – 8 % உம், தாவர எண்ணெய் வகைகளில் 50 – 80% உம் மற்றும் சிறிதளவாக தேசிக்காய்சாறு அல்லது விநாகிரி உடன் மிளகு, கடுகு பசை , உப்பு என சேர்க்கப்பட்டு தயாரிக்கபடுகின்றது.

ஆனால் தற்போது சைவ பிரியர்களிற்காக பாலிலும் தயாரிக்கப்படுகின்றது. இதை இப் பகுதியில் தருகின்றேன்.

குறிப்பு :மூலப்பொருட்கள் வெப்ப நிலை சம அளவாக கிட்டதட்ட 20 பாகையில் (அறை வெப்பநி‌லை) இருப்பது நல்லது.

முறை 1

தேவையான பொருட்கள்:

250ml சோயா பால்
200ml சோயா எண்ணெய்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1 தேக்கரண்டி உப்பு
250ml பியஸ்பழ சாறு (pears = Birnen = poires)
1 சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு

செய்முறை:

1.ஒரு பாதிப்படையாத உயரமான ஒடுங்கிய பாத்திரத்தில் சோயா பால், சிறிதளவு சோயா எண்ணெயை இட்டு கூடிய விசையில் whisk=Rührbesen = fouet (இதைவிட hand blender= Mixstab = mixeur plongeant சிறந்தது.)அடியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி அடிக்கவும்.

2.ஒரு நிமிடத்தின் பிற்பாடு மிகுதி எண்ணெயை சிறிதளவாக சேர்த்து சேர்த்து தோடர்ந்து அடிக்கவும்.

3.நன்றாக அடிக்கப்பட்டவுடன் எலுமிச்சை சாறு, உப்பு ,பியஸ் பழசாறு, வேகவைத்த உருளைக்கிழங்கு இட்டு பசையாகி வரும் வரை அடிக்கவும்.

4.நன்றாக திரண்டு வந்த பின் இரண்டு மணித்தியாலங்கள் குளி்ரூட்டியில் வைத்த பின் தேவைக்கேற்ப பரமாறலாம்.

முறை 2

தேவையான பொருட்கள்:

100 ml சோயா பால்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி கடுகுபசை(mustard = Senf = moutarde)
1/2 தேக்கரண்டி உப்பு
சிறிதளவு மிளகு துாள்
125 ml எண்ணெய் (தாவர , ஒலீவ் ,கடலை போன்றவை

செய்முறை:

1.ஒரு பாதிப்படையாத உயரமான ஒடுங்கிய பாத்திரத்தில் சோயா பாலை எலுமிச்சை சாறுடன் திரையும் வரை அடிக்கவும்.

2.அடிக்கப்பட்டவுடன் மிளகு துாள் ,கடுகுபசை,உப்பு இட்டு அடிக்கவும்.

3.சிறிதளவு சிறிதளவு ஆக எண்ணெயை இட்டு கூடிய விசையில் whisk=Rührbesen = fouet (இதைவிட hand blender= Mixstab = mixeur plongeant சிறந்தது.)அடியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி அடிக்கவும்.

4.மிகுதி எண்ணையை படிப்படியாக ஊற்றி அடித்து இறுதியில் இறுகிய பசையாக மயோ உண்பதற்குரிய தன்மையாகின்றது.

mayo besenmayo mixer

மயோனைச வை பிரதானமாக சேர்த்து தயாரிக்கப்படும் சோஸ்கள்

Sauce Chantilly :

மயோ +தேசிக்காய்சாறு + சிவப்பு மிளகாய் துாள் +whipped cream

Sauce ravigote :

மயோ+ மூலிகைகூட்டு + பூண்டுதாள்குறுனி (schnittlauch=chives= ciboulette)+

Sauce Remoulade :

மயோ+Caper(Kapern =Câprier)+ நெத்தலிமீன் +கடுகுபசை+ tarragon(Estragon estragon) +ஊறவிட்டவெள்ளரிக்காய்

Sauce verte:

மயோ + மூலிகைகூட்டு

Sauce tartare:

மயோ +அவித்த மஞ்சள்கரு+ பூண்டுதாள் குறுனி (schnittlauch=chives= ciboulette)

Sauce andalouse:

மயோ +தக்காளிபசை+ குடைமிளகாய்குறுனி

Cocktailsauce:

மயோ + Ketchup அல்லது தக்காளிபசை

Aioli:

மயோ +மிளகுதுாள் + அரைத்த உள்ளி

குறிப்பு:

மேல் தரப்பட்ட சோஸ்களுடன் தேவையேற்படின் உப்பு, மிளகுதுாள், சீனி போன்றவையும் சேர்த்து தயாரிக்கப்படும்

இன்னும் பல…………….

மயோனைச வை பிரதானமாக சேர்த்து தயாரிக்கப்படும் சலாட் Dressing

கொக்டெய்ல் dressing = Cocktail dressing = Cocktail dressing = Cocktail vinaigrette

தேவையான பொருட்கள்

200 g மயொனைஸ = Mayonnaise
100 g தக்காளி ப‌சை அல்லது 100g Ketchup
50 ml பால்கிறீம் = Schlagsahne = whipped cream = crème fouettée
1தேக்கரண்டி தேசிக்காய் சாறு
1தேக்கரண்டி குதிரை முள்ளங்கி பசை = Horseradish = Meerrettich = le raifort
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

குக்தமிழ் dressing = Cooktamil dressing =Cooktamil dressing = Cooktamil vinaigrette

தேவையான பொருட்கள்

200 g மயொனைஸ = Mayonnaise
1 பல் அரைத்த பல் உள்ளி
25g அரைத்த பிரஞ்சு கடுகு = french mustard = french senf =moutarde française
15g தேசிக்காய் சாறு
1தேக்கரண்டி குதிரை முள்ளங்கி பசை = Horseradish = Meerrettich = le raifort
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள் , நீர்
25g சீனி
25 ml (b)பல்ஸமிகோ விநாகிரி = Balsamic vinegar = Balsamico essig = vinaigre balsamique

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>