குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Dez 25th, 2014 Comments: 0

சொவ்ளெஸ் = dessert soufflés = auflauf puddinge = les soufflés dessert

Tags

souffei bestஇது ஒரு இனிப்பு வகையைக் கொண்ட அடிப்படைத் தயாரிப்பாகும். இதனை அடிப்படையாக கொண்டு பல வகை soufflés தயாாிக்கலாம்.
முதலில் அடிப்படைத் தயாரிப்பு முறையை பார்க்கலாம்.

6 – 8 பேருக்குரியது தேவைப்படும் நேரம் 60 – 80 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

250ml பால்
50 g வெண்ணெய் = butter
50 g அரிக்கப்பட்ட கோதுமை மா
6 மஞ்சள்கரு
6 வெள்ளைக்கரு
1 வண்ணிலா தண்டு = vanilla bean அல்லது வண்ணிலா சீனி
80 சீனி
ஒரு சொட்டு உப்பு

செய்முறை

1. ஒரு சுத்தமான தடித்த பாத்திரத்தில் பால் அரைப்பகுதி சீனியுடன் வண்ணிலா தண்டில் பிரித்தெடுத்த வண்ணிலா பசையையும் உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.

2. இளகிய வெண்ணையையும் மாவையும்பிசைந்து வைக்கவும்.
(இதனை roux = mehlschwitze என அழைக்கப்படும்)

3.கொதித்த பாலை அடுப்பில் இருந்து வெளியில் எடுத்து கலந்த பசையை
இட்டு கலக்கவும்.கலக்கும்போது நன்றாக இறுகிக் கொண்டுவரும் போது
அடுப்பை குறைந்த அளவில் விட்டு பாத்திரத்தை மீண்டும் அடுப்பில்
வைத்து மிக கவனமாக பாத்திரத்தின் அடிப்பகுதி பசையான களியுடன்
ஒட்டி அடிப்பிடிக்கும் தன்மை வரை மரக்கறண்டி போன்றவற்றால்
ஒழுங்கான முறையில் கிளறவும்.அடிப்பிடித்து வரும் பசையை வேறு
ஒரு பாத்திரத்தில் மாற்றி ஓரளவு ஆறவிடவும். (இதனை Choux
brandteig என அழைக்கப்படும்.

4. இதே நேரத்தில் oven = ofen = four 100°c யில் சூடாக்குவதுடன்
ஒரு தட்டையான பாத்திரத்தில் 3/4 உயரத்திற்கு நீர் ஊற்றி oven இல்
வைத்து சூடாக்கவும். பாத்திர உயரம் பிற்பாடு தேவைப்படும் கப்பிற்கு
மிஞ்சிய உயரமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. ஆறிவரும் பசையில் கொஞசம் கொஞ்சமாக மஞ்சள் கருவை
கலக்கவும்.

6. வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளளைக்கருவையும் மிகுதி
சீனியையும் கலந்து இறுக்கமான நுரையாக அடித்து பின்

7. முதல் கலந்த பசையுடன் மெதுவாக வெள்ளைக்கரு பசையை
கலக்கவும். கலக்கும் போது நுரையான பசை குலையாமல் மெதுவாக
கலப்பது முக்கியமானது.

8. இதே நேரத்தில் தேனீர் கோப்பை மாதிரி சிறிய கப்பில் வெண்ணை
உடன் சிறிதளவு சீனிகலந்து கப்பின் உட்பகுதியில் பூசவும்.ஏனெனில்
பிற்பாடு கப்புடன் ஒட்டாமல் வெளியில் எடுப்பதற்ககாகவே.

9. வெண்ணெய் பூசிய கப்பில் கலந்த கலவையை 3/4 உயரத்திற்கு
ஊற்றி மெதுவாக சூடான தண்ணியுள்ள பாத்திரத்தில் வைத்து 150°c
யில் 25 நிமிடங்கள் வேக விடவும்.

10.வேகிய soufflés ஐ உடனே பரிமாறுவது சிறந்தது. ஏனெனில் ஆறிய
soufflés களியாகி தட்டையாகிவிடும்.அதனால் பரிமாறும் காலத்தை
கணித்து தயாரிப்பது நன்று.

குறிப்பு இதனுடன் ஐஸ்கிறீம், பழங்கள், இனிப்புசோஸ் சோ்த்து பரிமாறுவது சிறப்பாகும்.

சொக்லட்soufflés தயாரிப்பதற்கு இதேபடிமுறையில் 100 கிராம் உருகிய
சொக்லட்டை சோ்த்தால் போதுமானது.

தோடம்பழsoufflés தயாரிப்பதற்கு இதேபடிமுறையில் பாலிற்கு பதிலாக
தோடம்பழசாறும் சிறிதளவு சுரண்டிய தோடம்பழ கோதும் இட்டு தயாரிக்கலாம்.

இதுபோல உங்களுக்கு விரும்பிய சுவையை சேர்த்து தயாரிக்கலாம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>