குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home தக்காளி சூப் உடன் பாலாடைக்கட்டி துண்டுகள் (mozzarella cheese) =Tomato soup with mozzarella
« Home »
Jul 19th, 2014 Comments: 0

தக்காளி சூப் உடன் பாலாடைக்கட்டி துண்டுகள் (mozzarella cheese) =Tomato soup with mozzarella

Tags

Tomato soup with mozzarella = Tomatensuppe mit Mozzarella =Soupe de tomates à la mozzarella

இந்த தக்காளி சூப்பானது ஒரு அடிப்படைத் தயாரிப்பாக கருதமுடியும். சில உணவுத்தயாரிப்புகளிற்கு இந்த சூப்பானது சோஸ் ஆக பாவிக்கலாம்.

தேவையான பொருட்கள்

1Kg தக்காளி
100g வெங்காயம் (கள்)
1 மேசைகரண்டி சீனி
2 தேக்கரண்டி balsamic வினிகர் (இருந்தால் அல்லது வேறு வினிகர் மற்றும் தேசிக்காய்சாறு
1 மேசைக்கரண்டி மூலிகைகூட்டு (கீழே உள்ள Link இல் பார்க்கவும்.)
10g துளசி = Basilikum : basil : basilic ( கீழே உள்ள Link இல் பார்க்கவும்.)
5 பல் உள்ளி
50 ml ஒலீவன் அல்லது வேறு எண்ணைய்
உப்பு மற்றும் மிளகு
பாலாடைக்கட்டி துண்டுகள் (mozzarella cheese)இது ஒருவகை இத்தாலிய மென்மையான பாலாடை

மற்றும் சேர்த்து உண்பதற்காக ரொட்டி அல்லது பாண்வகை

1.செய்முறை

வெங்காயம் , உள்ளி, துளசி போனறவற்றை சுத்தம் செய்வதுடன் மற்றம் தக்காளியை நீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.

உள்ளி,துளசி வெங்காயத்தை குறினி துண்டுகளாக வெட்டவும்.

2.செய்முறை

பாலாடைக்கட்டி துண்டுகளை ( mozzarella ) 1/2cm அளவில் துண்டுகளாக வெட்டி வைக்கவும்

3.செய்முறை

தக்காளியின் மூல் பகுதியை சிறு கத்தி கொண்டுஅகற்றவும்.
அத்துடன் மேல் பகுதி தோலில் மெல்லிய கீறாக வெட்டவும்.
நன்றாக கொதித்த நீரில் அரை நிமிடம் இட்டு பின் குளிர்ந்த நீரில்
இடவும். அதன் பின் தக்காளியின் தோல் இலகுவாக நீக்கவும்.
நான்கு பாகமாக வெட்டி விதை மற்றும் நீர் பகுதிகளை அகற்றவும்.

4.செய்முறை

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் வெங்காயம், உள்ளியை இட்டு வதக்கிய பின் தக்காளியை இட்டு தொடர்ந்து வதக்குவதுடன் மிளகு, சீனி, உப்பு ,வினிகர்,மூலிகைகூட்டுடன்
அரை லீற்றர் நீரையும் சேர்த்து மூடி கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவியவிடவும்.

5.செய்முறை

தக்காளி கூட்டு அவிந்ததும் துளசி குறுனியைஇட்டு உடன் கடையவும். ஏனெனில் துளசி இலை ஆவியில் கறுப்பாகிவிடும்.
பின் சுவை பார்த்து (மிளகு, சீனி, உப்பு ) ஒருமுறைசூடாக்கவும்.

6.பரிமாறும் முறை

ஆழமான டிஷ் இல் தக்காளி கூட்டை வார்த்து அதன் மேல் பாலாடைக்கட்டி துண்டுகளை இட்டு அதன் மேல் உங்கள் விருப்பபடி கிறீம் அல்லது துளசி கிளையை மிதக்க விட்டு ரொட்டியுடன் அல்லது பாணுடன் பரிமாறலாம்.

குறிப்பு: அசைவ பிரியர்கள் பாலாடைக்கட்டி துண்டுகளை தவிர்த்து மீன், இறால், கணவாய், போட்டு உண்ணலாம்.

மூலிகைகூட்டு

ஓமம் : துளசி : Basilikum : basil : basilic

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>