தயிர் = yogurt = joghurt = yaourt
பாலில் நுண்ணுயிர்கள் (Lactic acid bacteria) நொதித்தல் காரணமாக கிடைக்கும் பொருளாகும். பக்ரீறியாவால் பாலில் உள்ள லக்ரோஸ (lactose) நொதிக்கும் போது வரும் அமிலத்துடன் பாலின் புரதமும் செயல்புரியும் போது புளிப்புத்தன்மையுடன் உருவாக்கப்படுகின்றது.தயிரானது கொழுப்பு நீக்கி வீதம் குறைத்த முறையிலும் வாங்கலாம்.தற்பொழுது இவை இனிப்பு சேர்த்தும் , கொழுப்பு குறைத்தும், பலவயைான சுவைகளிலும் கிடைக்கின்றன.
தயிரில் புரதங்கள், கல்சியம்,ரிபோப்லாவின்(Riboflavin) , விற்றமின் B6 , B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும்.பாலைவிட அதிகமான ஊட்டச்சத்து நிறைந்தது . மிதமான லக்ரொஸ் ஒவ்வாமையுள்ள மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம், ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்ரோஸ் நுண்ணுயிர் காரணமாக லாக்டிக் அமிலமாக மாறுவதால் பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப்படுதால், லக்ரொஸ் ஒவ்வாமையுள்ள ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது.
இதன் பிரிவுகளாக
இயற்கை தயிர்
0.5 ,1.5 ,1.8 , 3.5 வீத கொழுப்பு நிறைந்த நிலையில் இயற்கை தயிராக கிடைக்கின்றன. இவை காலைஉணவுகளிலும், மற்றும் எமது உணவுகளுடனும் சேர்த்து உண்ணப்படுகின்றது.
கிரேக்க நாட்டு ரஸற்ஸ்கி (Tzatziki),துருக்கிநாட்டு கஸிக் எனப்படும் வெள்ளரிக்காய் கூட்டு (Čačík=Cacık), பல்கேறிய நாட்டு Tarator என பல விதமான கூட்டுகளிற்கு (Sauce) பிரதானமானது.இதன் தயாரிப்புகளைவேறுபகுதியாக குக்தமிழ்.கொம் இல் தர முயல்கின்றேன்.
பழதயிர் (fruit yogurt =Fruchtjoghurt=yaourt aux fruits)
80% தயிரும் 6% பழமும்
கொண்டதாக இருக்கும்.
பழசுவையுடனான தயிர் (Yogurt with fruit preparation)
3.5 % பழமும் அத்துடன் பழ சுவையும் கலந்து காணப்படும்.
அருந்து தயிர் (drinking yoghurt =Trinkjoghurt=yaourt à boire)
இது திரவத்தன்மையானது. தயிருடன் பழதசை அல்லது பழசாறும் , சுவையூட்டிகளும் (சீனி,உப்பு,புளிப்பு) கலந்து தயாரிக்க படுகின்றன.
உதாரணங்கள்: இந்திய லசி (Lassi) , துருக்கிய அயிறன் (Ayran ) இத்துடன் பல நாடுகளில் சொக்லேட் , Vanilla , Nougat, Stracciatella, கடலை , தேங்காய் பால், அல்லது கோப்பி ஆகிய சுவைகளில் கிடைக்கின்றது.
இதற்கு மாற்றாக தற்போது சோயா தயிரும் பெரும்பாலும் எங்கும் கிடைக்கின்றன.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
I coulԀ not reѕist commenting. Well written!