குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 24th, 2014 Comments: 0

தெளிர்ந்த மீன்சாறு (கஞ்சி)=Fischbrühe= Fish stock = Fumet de poisson

Tags

ஒரு அடிப்படை தயாரிப்பு ஆகும். இவ் இணையத்தில் இனிவரும் பல உணவு தயாரிப்புகளிற்கு இது தேவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

2Kg மீன் முள்
50 g வெங்காயம்
200 g லீக்ஸ்
30 g வெண்ணெய் = Butter
500 ml வெள்ளை வைன் = Wein
3 Liter தண்ணீர்
4 மே‌சைக்கரண்டி தேசிக்காய் சாறு
3 பல்லு உள்ளி
6 மிளகு
2 கிளை வோக்கோசு (parsley = persil)
2 விரிகுடா இலை ( Lorbeerblatt= Bay leaf = la feuille de laurier ) (கீழே படம்)
உப்பு

செய்முறை

முதலில் லீக்ஸ் ,வெங்காயம் துப்பரவு செய்து கழுவி ‌ஒரு அங்குல துண்டா வெட்டவும்.
ஓரளவு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய் இட்டு சூடானதும் , உள்ளி, லீக்ஸ் வெங்காயம் , நொறுக்கிய மிளகு ஐ இட்டு வாட்டவும்.
பின் ஓரளவு சிறிதாக்கிய மீன்முள்ளை இடவும்.
வெள்ளை வைன் = Wein ஐ பரப்பி ஊற்றவும்.
பிற்பாடு நீர், தேசிக்காய் சாறு ஊற்றியதுடன் வோக்கோசு , விரிகுடா இலை, உப்பு
இட்டு கொதிக்க விடவும்.
மெதுவாக அரை மணி நேரம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது மேல்வரும்
நுரை‌யை மெதுவாக வடிகரண்டியால் அகற்றவும்.

தேவையேற்படின் மேலு்ம் நீரை இடலாம். ஆனால் சுவை குறையும். எவ்வளவிற்கு
கொள்ளளவு குறையும் வரை அடுப்பில் இருந்தால் அதன் சுவையும் சத்தும் கூடவாக
இருக்கும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி 10 நிமிடம் அமைதியாக வைத்து , எல்லா பொருட்களும் அடியில் அடைந்ததும், ஓரு வடியால் இன்னொரு பாத்திரத்தில் மெல்லமாக தெளிர்ந்த சாறை வடித்தெடுக்கவும்.

குறிப்பு 1 பின் உப்பு தேவையேற்படின் இட்டு சுவை பார்க்கவும். இன்னும் ஒரு மணிநேரம் சாற்றை அமைதியாக வைத்தால் இன்னும் தெளிர்ந்த சாற்றை பெறலாம்.
தௌிர்ந்த சாற்றை ஒரு போத்திலில் இட்டு குளிரூட்டியில் பல நாட்கள் வைத்து
தேவையேற்படின் எடுத்து பாவிக்க கூடியதாகும்.

குறிப்பு 2 இந்த சாற்றுடன் உங்களிற்கு விரும்பிய மீன்துண்டு , இறால் அல்லது வேறு கடல் வகை பொருட்கள், மரக்கறி, சோறு, மூலிகை, நுாடில்ஸ் ஐ இட்டால் தெளிர்ந்த மீன் சூப் ஆகின்றது.

குறிப்பு 3 விரிகுடா இலை ( Lorbeerblatt= Bay leaf = la feuille de laurier )
lorbeer blattelorbeer blatte 2

}}}}

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>