குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home நுாடில்ஸ் உடன் இறாலும் கீரையும் = Ribbon pasta with prawns and spinach = Bandnudeln mit garnelen und spinat =Ribbon pasta aux crevettes et les épinards
« Home »
Apr 17th, 2015 Comments: 0

நுாடில்ஸ் உடன் இறாலும் கீரையும் = Ribbon pasta with prawns and spinach = Bandnudeln mit garnelen und spinat =Ribbon pasta aux crevettes et les épinards

Tags

nudeln garnellen
நான்கு பேருகுரியது தேவையான நேரம் 35 நிமிடம்

தேவையான பொருட்கள்

400g Tagliatelle: நுாடில்ஸ் மெல்லிய 1 சென்றிமீட்டர் அகலம் கொண்டது (நுாடில்ஸ் பார்க்கவும்)
400g துப்பரவாக்கிய இறால்
250g துப்பரவாக்கிய கீரை அல்லது கடையில் வாங்கிய பதப்படுத்திய கீரை
100ml பாலாடை = கிறீம் = cream = Sahne =crème
300ml மரக்கறிசாறு அல்லது வேறு சாறு இல்லாவிடத்து நீரை பாவியுங்கள்.
2 தேக்கரண்டி எண்ணைய்
1 பல் உள்ளி
தேவையான அளவு உப்பு
மிளகுதுாள் மற்றும் மிக சிறிதளவு சாதிக்காய்துாள்
1 வெங்காயம்
10g மா வுடன் கலந்த வெண்ணைகட்டி =Butter = beurre (5g+5g)
1 தேக்கரண்டி மூலிகைகூட்டு (இருப்பின்)

செய்முறை: 1

நுாடில்ஸை கொதிநீரில் உப்பிட்டு அவித்து வடித்து மெல்லிய எண்ணெயில் ஒட்டாமல் இருக்க கலந்து வைக்கவும்.(நன்றாக அவிக்காமல் முற்கா பதத்தில் எடுக்கவும்.ஏனெனில் பிற்பாடு கலவையில் மீண்டும் இடவேண்டும்.)

இதே நேரத்தில்
உள்ளி, வெங்காயம் துப்பரவு செய்து சிறிய துண்டாக வெட்டி வைக்கவும்.
கீரைஇலையை துப்பரவு செய்து நீரில் கழுவி,உலரவிட்டு சிறிதாக வெட்டி வைக்கவும்.
இறாலை துப்பரவு செய்து நீரில் கழுவி,உலரவிடவும்.

செய்முறை: 2

ஒரு குண்டால பாத்திரத்தில் எண்ணையை இட்டு சூடாக்கி வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி யை இட்டு மெல்லிதாக வதங்கிவரும் போது, இறாலை இட்டு, 3 நிமிடம் தொடா்ந்து வறட்டிய பின், கீரையை இட்டு கலந்துவதக்கி பின் சாறு அல்லது நீரை ஊற்றி 5 நிமிடம் அவிய விடவும்.

அதன்பின் தேவையான அளவு உப்பு,மிளகுதுாள்,சிறிதளவு சாதிக்காய்துாள்,மூலிகைகூட்டையும் இடவும்.
அத்துடன் பாலாடையை ஊற்றி கலந்து கொதித்து வரும் போது மாவுடன் கலந்த வெண்ணெயயை சேர்த்து கலக்கவும். கலவை தடிப்பாகும்.

குறிப்பு: இக்கலவை கூடிய தடிப்பாக இருந்தால் பால் அல்லது சாற்றை இடலாம்.

தடிப்பான கலவை கொதித்த ,அவித்த நுாடில்ஸை இட்டு கலந்து, ஒருமுறை சூடாக்கி சுவைபார்க்கவும். தேவையேற்படின் உப்பு, மிளகுதுாள் இடவும். சுவைபார்த்தபின் கோப்பையில் இட்டு பரிமாறலாம்.

குறிப்பு: சைவமானவர்கள் இறாலை தவிா்த்து கூடுதலான கீரை சோ்த்து சமைத்து உண்ணலாம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>