குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home பதப்படுத்திய ஆட்டு முதுகு நறுக்குடன் மரக்கறியும் அவித்த உருளைக்கிழங்கும்
« Home »
Jul 8th, 2014 Comments: 0

பதப்படுத்திய ஆட்டு முதுகு நறுக்குடன் மரக்கறியும் அவித்த உருளைக்கிழங்கும்

Tags

Marinated lamb chops with vegetables and boiled potatoes=Marinierte Lammkoteletts mit Gemüse und salzkartoffeln=Côtelettes d’agneau marinées avec des légumes et pommes de terre bouillies

2 பேருக்கரியது

தேவையான பொருட்கள்

6 துண்டு ஆட்டு முதுகு நறுக்கு = schaf kotelett = Mutton chop = Côtelette de mouton ( கீழ் உள்ள Link ஐ பார்க்கவும்.)
1 கத்திரிக்காய் = Aubergine = Eggplant= Aubergine
1 சீமை சுரைக்காய் = Zucchini = courgette
3 தக்காளி = Tomaten = Tomatoes= Tomates
1 வெங்காயம்= Zwiebel = Onion= Oignon
5பல் பூண்டு= Knoblauch= Garlic =ail
25g மூலிகைகூட்டு = kräuter = herbs = herbes(கீழ் உள்ள Link ஐ பார்க்கவும்.)
3 கிளை துமியான் :Thymiane : thyme : thym,(கீழ் உள்ள Link ஐ பார்க்கவும்.)
50ml எண்ணெய் (எந்தவகையானதும்) ஒலிவ் சிறந்தது.
10g ஓமம் : துளசி : Basilikum : basil : basilic( கீழ் உள்ள Link ஐ பார்க்கவும்.)
அத்துடன் மிளகுதுாள் , உப்பு ,சிறிதளவு தேசிக்காய்சாறு

500 g உருளைக்கிழங்கு
10g உருகிய வெண்ணை

படிமுறை 1

துமியான், உள்ளி மற்றும் மூலி‌கைகளை குறுனியாக வெட்டிவைக்கவும்.
துமியான் குறினியும், மிளகுதுாள் , அரைபகுதி உள்ளி,தேசிக்காய்சாறு , உப்பையும் சிறிதளவு எண்ணெயில் கலக்கவும்.
ஆட்டு முதுகு நறுக்கு துண்டை சுத்தம் செய்து கலந்து வைத்த துமியான் கல‌வையில் பிரட்டி 1மணித்தியாலம் ஊறவைக்கவும்.

படிமுறை 2

முதலில் வெங்காயம் , உள்ளி போனறவற்றை சுத்தம் செய்வதுடன் மற்றய மரக்கறிவகைகளை நீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.

வெங்காயத்தை மெல்லிய வளையமாக வெட்டிவைக்கவும்.
மரக்கறிவகைகளை 1/2 சென்ரிமீற்றர் அளவில் வட்டமாக வெட்டிவைக்கவும்.
தக்காளியை நான்கு பாகமாக வெட்டி விதை மற்றும் நீர் பகுதிகளை அகற்றி 1cm துண்டுகளாக வெட்டவும்.

படிமுறை 3

உருளைக்கிழங்கின் தோலை சீவியபின், நீரில் கழுவி ஒரே அளவான பெரிய துண்டா வெட்டி, ஒருபாத்திரத்தில் நீருடன் இட்டு தேவையான அளவு உப்பிட்டு மூடி அவிக்கவும். அவிந்தவுடன் ஒரு வடிபாத்திரத்தில் நீரை வடித்து உருகிய வெண்ணையை அதன் மேல்பரவ ஊற்றி சூடு ஆறாமல் மூடி வைக்கவும்.
குறிப்பு: அவிந்த உருளைக்கிழங்கின் மேல் ஒரு போதும் மீண்டும் நீரை ஊற்றக்கூடாது. ஊற்றினால் கிழங்கில் உள்ள பசைத்தன்மையால் ஒழுங்கற்றதாகிவிடும்.

படிமுறை 4

சூடான சட்டியில் அரைபகுதி எண்ணையை இட்டு சூடானதும் கத்திரிக்காய் , சீமை சுரைக்காய் இரு பக்கமும் வாட்டவும். பின் வெங்காயம் ,உள்ளி, இட்டு தொடர்ந்து மெல்லி சூட்டில் வாட்டவும். இறுதியில் தக்காளி மூலிகைகூட்டை மேல் துாவி அடுப்பில் இருந்து அகற்றவும்.

படிமுறை 5

மரக்கிறி வாட்டும் நேரத்தில் வேறொருசூடான சட்டியில் மிகுதி எண்ணையை இட்டு சூடானதும் பதப்படுத்திய ஆட்டு முதுகு நறுக்கை இருபக்கமும் மாறிமாறி வாட்டவும். தேவையேற்படின் உப்பு துாவலாம். வாட்டும் போது கருகாமல் இருக்க அடுப்பின் சூட்டை கூட்டி குறைக்கலாம்.ஆனால் முதல் தரம் வாட்டும்போது குறைப்பதை தவிர்ப்பது நல்லது.ஏனெனில் முறுகாமல் இறைச்சி அவிய தொடங்கிவிடும். இருபக்கமும் 5 – 8 நிமிடங்கள் வாட்டவேண்டும்.

குறிப்பு:

இவ் இறைச்சி அரை பதங்களிலும் சாப்பிட கூடியது. உங்களிற்கு விரும்பிய பதத்தில் உண்பதற்கு வாட்டும் நேரத்தை குறைக்கலாம் அல்லது கூட்டலாம். மற்றும் கூட வாட்டும் போது இறைச்சி கடுமையாகி மெல்லும் தன்மை கடினமாகி விடும். ஆதலால் அரைப்பதத்தில் உண்பது சுவையாக இருக்கும். கற்பிணிபெண்கள் நன்றாக வாட்டி உண்பது முக்கியமானது.

பரிமாறும் முறை

கோப்பையில் ஒரு பகுதியில் 3 இறைச்சி துண்டை அடுக்கவும்.அதன் அருகில் வாட்டிய மரக்கறியை வெங்காய தக்காளியுடன் வைக்கவும். மற்றய பகுதியில் அவித்த உருளைக்கிழங்கை வைத்து ‌3 இலை கொண்ட துளசி கிளையை வைத்து பரிமாறலாம்.

ஆடு = schaf / lamm = sheep /Lamb / mutton = mouton/ agneau
மூலிகைகூட்டு
துமியான் :Thymiane : thyme : thym,

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>