குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
Home பாண்துாளால் பிரட்டி பொரித்த கோழி நெஞ்சுப்பகுதியுடன் காளான் சோஸ் உம் வறுத்த உருளைக்கிழங்கு
« Home »
Mrz 3rd, 2014 Comments: 0

பாண்துாளால் பிரட்டி பொரித்த கோழி நெஞ்சுப்பகுதியுடன் காளான் சோஸ் உம் வறுத்த உருளைக்கிழங்கு

Tags

Hähnchenbrust schnitzel mit Champion rahm und Bratkartoffeln = Chicken breast cutlet with cream Champion and fried potatoes = Escalope de poulet avec le champion de la crème et pommes de terre sautées

நான்கு பேருக்கு

தேவையான பொருட்கள்:

4 கோழி நெஞ்சு ( எழும்பு , தோல் இல்லாமல்)
200g பாண் துாள்
100g கோதுமை மா
3 முட்டை
300 ml எண்ணெய்
அத்துடன் உப்பு , மிளகுதுாள்

காளான் சோஸ்

500 g காளான்
100 g வெங்காயம்
25 g உள்ளி
25 g கோதுமை மா
25 g வெண்ணெய் Butter = beurre
25 g மூலிகை கூட்டு (விபரம் கீழே)
200 ml எழும்பு அல்லது மரக்கறி சாறு (இருந்தால்) அல்லது பால் (விபரம் கீழே)
50 ml பாலாடை= Sahne =double cream = crème à double
50 ml எண்ணெய்
10g வோக்கோசு = (parsley = persil)
அத்துடன் உப்பு , மிளகுதுாள் , தேசிக்காய் சாறு

வறுத்த உருளைக்கிழங்கு

600 g உருளைக்கிழங்கு (இறுக்கமான)
50 ml எண்ணெய்
அத்துடன் உப்பு , மிளகுதுாள் ,சிறிதளவு சாதிக்காய் தூள் = Muskat = Nutmeg =noix de muscade

1. செய்முறை

  உருளைக்கிழங்கை நீரில் தோலுடன் கழுவிய பின் ஓருபாத்திரத்தில் இட்டு மேல்மட்டம் வரை நீர் ஊற்றி உப்பிட்டு மூடி அவிக்கவும். அவிந்ததும் வடியில் ஊற்றி
  ஆற விடவும். (எக்காரணம் கொண்டும் குளிர்நீரில் ஊற்ற கூடாது)
  ஆறியதும் தோலை உரித்து மெல்லிய துண்டாக வெட்டி வைக்கவும்.

2. செய்முறை

  காளானை சுத்தம் செய்து 1cm துண்டுகளாக வெட்டவும்.
  உள்ளி,வெங்காயத்தை சுத்தம் செய்து குறினி துண்டுகளாக வெட்டவும்.

3. செய்முறை

  கோழி நெஞ்சுப்பகுதியை சுத்தம் செய்து கரைப்பக்க ஊடாக தட்டையாக வெட்டி ‌அரை cm தட்டி உப்பு , மிளகுதுாள் துாவி வைக்கவும்.
  முட்டையை பாத்திரத்தில் இட்டு உப்பிட்டு கலக்கி வைக்கவும்.
  மா , பாண்துாள் ஐ வெவ்வேறு தட்டையான பாத்திரத்தில் இட்டு பரப்பி வைக்கவும்.

4. காளான் சோஸ் செய்முறை:

  அடுப்பில் சூடான சட்டியில் எண்ணையை இட்டு முதலில் உள்ளி , வெங்காயத்தை இட்டு வதக்கவும். ஓரளவு வதங்கியதும் காளான் இட்டு மேலும் வதக்கவும்.
  ஓரளவு அவியும் நிலையில் சட்டியை அடுப்பில் இருந்து விலக்கி வெண்ணையை இட்டு இளகியதும், மாவை சேர்த்து கலந்து , மீண்டும் அடுப்பில் வைத்து எழும்பு அல்லது மரக்கறி சாறு (இருந்தால்) அல்லது பாலை இட்டு கலக்கியால் கலக்கவும்.
  அத்துடன் மிளகு, உப்பு ,சிறிதளவு தேசிக்காய் சாறு ஐயும் இடவும்.பாலுடன் சூடாகும் போது தடித்த கூழான சோஸ் உருவாகும்.
  அதன்பின் மூலிகை கூட்டை இட்ட பிற்பாடு பாலாடையையும் இட்டு சுவைபார்க்கவும். தேவையேற்படின் பாலாடை,உப்பு , மிளகுதுாள் மேலும் சேர்க்கலாம். கொதித்ததும் அடுப்பில் இருத்து இறக்கியதும் வோக்கோசு வை மேல் துாவி கலந்துவிடவும்.

champignonrahm

5. வறுத்த உருளைக்கிழங்கு செய்முறை:

  அடுப்பில் சூடான Pan இல்( Non-stick pan சிறந்தது) எண்ணையை இட்டு சூடானதும் மெல்லிய துண்டாக வெட்டிய உருளைக்கிழங்கை பரப்பி இடவும்.( எக்காரணம் கொண்டும் உடன் கிழங்கை கிளறக் கூடாது. ஏனெனில் கிழங்கு மேலும் உடைந்து களியாக போய்விடும்)
  ஓரளவு கிழங்கு நிறமாகும் பொழுது மறுபக்கம் நிறமாக மெதுவாக அசைத்து பிரட்டவும். மண்ணிறமாக வரும்பொழுது மிளகு, சாதிக்காய் தூள், உப்பு இட்டு சுவைபார்க்கவும்.

bratkartoffeln

6.கோழி நெஞ்சு ஸ்நிற்செல்ற் செய்முறை:

  ஒரு அடுப்பில் சூடான Pan இல் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டையாக வெட்டி வைத்த கோழி நெஞ்சு துண்டை எடுத்து, முதலில் மாவில் பிரடிய பின், அடித்து வைத்த முட்டையில் தோய்த்து பின், பாண்தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

schnitzel.jpg 1

7. ஓரு தட்டை கோப்பையில் வறுத்த உருளைக்கிழங்கு ஒரு கரையிலும், பொரித்த கோழி நெஞ்சுப்பகுதியை ஒரு கரையிலும் இட்டு , ‌காளான் சோஸ் ஐ கோழி நெஞ்சுப்பகுதியின் அரைப்பகுதியின் மேல் ஊற்றி ஏதாவது மூலிகை கிளை அல்லது தக்காளி துண்டை வைத்து பரிமாறலாம்

*மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

*மரக்கறி சாறு (கஞ்சி) = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumes

*தெளிர்ந்த இறைச்சி சாறு (கஞ்சி)= Fleischbrühe = Meatbroth = Bouillon (de viande)

]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>