குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jun 6th, 2014 Comments: 0

பாலாடை = கிறீம் = cream = Sahne =crème

Tags

பாலாடை = கிறீம் = cream = Sahne =crème

வேகச் சுழற்சி இயந்திரம் முலம் பசுபாலில் இருந்து மேல்வரும் நுரையை பிரித்தெடுத்த ‌தடித்த திரவமாகும். இதன் கொழுப்பின் உள்ளடக்கத்தை கொண்டு வெவ்வேறு பெயர்களில் அழைக்க படுகின்றது.
மற்றும் லக்டிக் அமிலம் பாக்டீரியா (Lactic acid bacteria ) வின் முலம் புளிப்பு தன்மையாக்கி மற்றும் ‌ கொழுப்பின் உள்ளடக்கத்தை கொண்டும் ‌வேறுவித பெயர்களிலும் பெறப்படுகின்றன. சுழற்சி படிமுறை குறைவில் இருந்து கூடும் போது ‌கொழுப்பின் உள்ளடக்கம் கூடி கோப்பிகிறீம் இல் இருந்து வெண்ணை வரைபெறப்படுகின்றது. மிஞ்சிய மிகுதி பகுதி ஆடை நீக்கிய பால் ஆகின்றது.

பாலுடன் ஒப்பிடும் போது இதில் புரதம் குறைவாகவும் கொழுப்பில் கரையக்கூடிய விற்றமின் , கொழுப்பும் கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான கிறீம்கள் குக் தமிழ்.கொம் இல் இனிவரும் பகுதிகளில் மிக மிக தேவையான பொருட்களாகும். ஒவ்வொரு பெயர்களில் அவற்றின் கொழுப்பு உள்ளடக்கத்துடன் தொடராக பார்ப்போம்.

நேரடியாக கையாளப்படாத கிறீம்: Cream =Rahm = Crème

கோப்பிகிறீம் = Coffee cream =Kaffeesahne = Crème à café : 10 – 15%

கிறீம் = Cream = Sahne (Rahm) = Crème : 22 – 30%

கடையும் கிறீம் = Whipped cream = Schlagsahne = Crème fouettée:30 – 34 %

தடித்த கிறீம்=Double cream =Sahne (Rahm) = Crème double :43 / 45%

வெண்ணைகட்டி =Butter = beurre:தொடர்ந்து கையாளப்படும் போது ‌82% கொழுப்புடைய வெண்ணை (Butter)உருவாக்கப்படுகின்றது.

Crème Chantilly : இது கடையும் கிறீமுடன் சீனியும்,வனில்ல (vanilla) வையும்
சேர்த்து கடையும் போது உருவாகின்றது.

லக்டிக் அமிலம் பாக்டீரியா (Lactic acid bacteria ) வின் முலம் புளிப்பு தன்மையாக்கிய கிறீம்: Sour cream = Saure Sahne = Acide crème

புளிப்பு கிறீம் = Sour cream = Saure Sahne = Acide crème : 10%

மெல்லிபுளிப்பு கிறீம் light cream = Crème légère : 20% (கொழுப்பு குறைந்த Crème fraîche )

Smetana =Schmand =Smetana : 20 – 29 % ( இதனுடன் தடிப்பை உருவாக்கும் மாப்பொருள் =Starch =Stärke = Amidon சேர்க்கப்பட்டுள்ளது.)

Crème fraîche =Crème fraîche : 30% மேல் ( இதனுடன்15% வரை மேசைச் சர்க்கரை = Sucrose =Saccharose சேர்க்கப்பட்டுள்ளது. நொதிப்படைந்த பின் சூடாக்குவது கூடாது.ஏனெனில் இரசாயன மாற்றமடையக்கூடியது.)

மஸ்கபோணா= Mascarpone : 70% கொழுப்புடையது. ( இது பாலாடைக்கட்டி=cheese=käse=fromage ஆகத்தான் கருதப்படுகின்றது.

புளிப்பு வெண்ணெய்கட்டி=sour cream butter =sauerrahmbutter= beurre de crème sure: தொடர்ந்து கையாளப்படும் போது ‌85% கொழுப்புடைய புளிப்பு வெண்ணெய்(Butter)உருவாக்கப்படுகின்றது.

மேல் தரப்பட்ட தரவுகள் பொதுப்படையானது. இவை தயாரிப்பாளர்களால் சில பொருட்கள் சேர்க்கப்ட்டோ அல்லது தவிர்க்கப்பட்டோ சிறிய பெயர் மாற்றங்களுடன் பாவனைக்கு விற்கப்படுகின்றது. மேல் தரப்பட்ட பொருட்களானது குக்தமிழ்.கொம் இல் இனிவரும் பகுதிகளில் மிக மிக தேவையான பொருட்களாகும்.

பால் = Milk = Milch = le lait

*****************************************************************************************************

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>