குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 7th, 2014 Comments: 0

பெஸமெல் சோஸ் : Bèchamel sauce : Bechamel sauce: sauce Béchamel

Tags

ஒரு அடிப்படை தயாரிப்பு ஆகும். இவ் இணையத்தில் இனிவரும் பல உணவு தயாரிப்புகளிற்கு இது தேவையாக இருக்கும்.
குளிரூட்டியில் பாதுகாத்து 4 – 5 நாட்களிற்கு தேவையேற்படும் போது உபயோகிக்கலாம்.குளிரூட்டியில் இருக்கும் போது தடித்த தன்மையாக இருக்கும். இதனுடன் பாலாடையை (கிரீம் = Sahne =double cream = crème à double ) சேர்த்து உங்களிற்கு விரும்பிய சுவையில் பல விதமான Sauce வகைகளை தயாரிக்கலாம்.

உதாரணங்கள்:

பெஸமெல் சோஸ் + மூலிகைக்கூட்டு +பாலாடை= Kräuter/ Herbal/ Herbes Sauce
பெஸமெல் சோஸ் + துளசி +பாலாடை = Basilikum / basil / basilic Sauce
பெஸமெல் சோஸ் + எஸ்ற்றாகோன்+பாலாடை = Estragon / Tarragon / estragon sauce
பெஸமெல் சோஸ் + பாலாடை = Sahne / cream / crème Sauce
பெஸமெல் சோஸ் + சிங்கறால் பசை+பாலாடை = Hummer/ lobster / homard Sauce

என உங்களின் தேர்வாக அமைக்க முடியும்.

குறிப்பு: தேவையான பொருளை எடுத்து முதலில் நன்றாக அரைத்த பிற்பாடு சேர்க்கவும்.
குறிப்பு : இவ் Sauce உடன் நுாடில்ஸ் , இறைச்சி , மீன் , மரக்கறிவகைகள் என கலந்தால்
ஒரு நேர உணவாகின்றது.

1 லீற்றர் பெஸமெல் சோஸ் (Bèchamel sauce ) செய்முறை

5 தேக்கரண்டி எண்ணைய்
100g வெங்காயம் = Zwiebel = Onion= Oignon
50g வெண்ணெய் Butter = beurre
50g வெள்ளை மா
25g பூண்டு Knoblauch= Garlic =ail
சிறிதளவு சாதிக்காய் தூள் = Muskat = Nutmeg =noix de muscade
தேவையான அளவு உப்பு
சிறிதளவு மிளகு
1 liter பால்

பெஸமெல் சோஸ் . (Bèchamel sauce ) செய்முறை

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில் உள்ளி , வெங்காயத்தை இட்டு வதக்கவும். ஓரளவு வதங்கியதும் சட்டியை அடுப்பில் இருந்து விலக்கி வெண்ணையை இட்டு இளகியதும், மாவை சேர்த்து கலந்து , மீண்டும் அடுப்பில் வைத்து பாலை இட்டு கலக்கியால் கலக்கவும். அத்துடன் மிளகு, சாதிக்காய்தூள், உப்பு ஐயும் இடவும்.பாலுடன் சூடாகும் போது தடித்த கூழான சோஸ் உருவாகும்.

குறிப்பு: சோஸ் சூடாகும் பொழுது ,சட்டி அடிபிடிக்கும் தன்மையடையாமல் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பு :இதனுடன் மரக்கறி சாறு (கஞ்சி = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumesஇருப்பின்) கலந்தால் கூடிய சுவையும் , சத்தும்கொண்டதாகவிருக்கும்.

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

*நூடில்ஸ் Pasta

மரக்கறி சாறு (கஞ்சி) = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumes

*****

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>