குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 30th, 2014 Comments: 0

மரக்கறி சாறு (கஞ்சி) = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumes

Tags

ஒரு அடிப்படை தயாரிப்பு ஆகும். குக்தமிழ்.கொம் இல் இனிவரும் பல உணவு தயாரிப்புகளிற்கு இது தேவையாக இருக்கும்.Gemüse brühe

இந்த சாற்றுடன் உங்களிற்கு விரும்பிய மரக்கறி, சோறு, நுாடில்ஸ் ஐ இட்டால் தெளிர்ந்த மரக்கறி சூப் ஆகின்றது.
Gemüse brühe 2

தேவையான பொருட்கள்

3 தேக்கரண்டி தாவர எண்ணெய்
2 வெங்காயம்
4 பெரிய கரட்
2 தக்காளி
1/4 ( Knollensellerie = celeriac = Céleri-rave ) (கீழே படம்)
1 லீக்ஸ்
2 கிளை வோக்கோசு (parsley = persil)
2 விரிகுடா இலை ( Lorbeerblatt= Bay leaf = la feuille de laurier ) (கீழே படம்)
சில மிளகு
சில பூண்டு
சில (Pimentkörner = allspice = quatre-épices) (கீழே படம்)
உப்பு , மற்றும் 4 லீற்றர் தண்ணீர்

செய்முறை

முதலில் கரட், celeriac , லீக்ஸ் துப்பரவு செய்து கழுவி ‌ஒரு அங்குல துண்டா வெட்டவும்

வெங்காயத்தை தோல் உரிக்காமல் நான்கு துண்டா வெட்டவும். ஒரு சட்டியில் நன்றாக மண்ணிறம் வரை வாட்டி எடுக்கவும்.

ஓரளவு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் இட்டு சூடானதும் , கரட், celeriac ,உள்ளி, லீக்ஸ் ஐ இட்டு மண்ணிறம் வரை வாட்டி எடுக்கவும்.
வாட்டியதும், தண்ணீரை ஊற்றவும்.

பிற்பாடு பாதியாக வெட்டிய தக்காளி ,வோக்கோசு,விரிகுடா இலை,allspice,மிளகு, வாட்டிய வெங்காயம் , உப்பு இடவும்.

மெதுவாக ஒரு மணி நேரம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது மேல்வரும்
நுரை‌யை மெதுவாக வடிகரண்டியால் அகற்றவும்.

தேவையேற்படின் மேலு்ம் நீரை இடலாம். ஆனால் சுவை குறையும். எவ்வளவிற்கு
கொள்ளளவு குறையும் வரை அடுப்பில் இருந்தால் அதன் சுவையும் சத்தும் கூடவாக
இருக்கும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி 10 நிமிடம் அமைதியாக வைத்து , எல்லா பொருட்களும் அடியில் அடைந்ததும், ஓரு வடியால் இன்னொரு பாத்திரத்தில் மெல்லமாக தெளிர்ந்த சாறை வடித்தெடுக்கவும்.

குறிப்பு 1 பின் உப்பு தேவையேற்படின் இட்டு சுவை பார்க்கவும். இன்னும் ஒரு மணிநேரம் சாற்றை அமைதியாக வைத்தால் இன்னும் தெளிர்ந்த சாற்றை பெறலாம்.
தௌிர்ந்த சாற்றை ஒரு போத்திலில் இட்டு குளிரூட்டியில் பல நாட்கள் வைத்து
தேவையேற்படின் எடுத்து பாவிக்க கூடியதாகும்.

குறிப்பு 2 இந்த சாற்றுடன் உங்களிற்கு விரும்பிய மரக்கறி, சோறு, மூலிகை, நுாடில்ஸ் ஐ இட்டால் தெளிர்ந்த மரக்கறி சூப் ஆகின்றது.

குறிப்பு 3 ஒரு அடிப்படை தயாரிப்பு ஆகும். இவ் இணையத்தில் இனிவரும் பல உணவு தயாரிப்புகளிற்கு இது தேவையாக இருக்கும்.


Knollensellerie = celeriac = Céleri-rave

120px-Sellerieknollen

விரிகுடா இலை ( Lorbeerblatt= Bay leaf = la feuille de laurier )
lorbeer blattelorbeer blatte 2

Pimentkörner = allspice = quatre-épices
piement

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>