குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 2nd, 2014 Comments: 0

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

Tags

இது ஒரு சுவையைக் கூட்டக்கூடியதும், உடல்நலத்திற்கு சிறந்ததும்,வாசனையை உணவிற்கு தரக்கூடியதும் ஆகும்.இந்த கூட்டில் வரும் மூலிகைகளைப் பற்றி இந்த இணையத்தில் வோறொரு பகுதியில் பார்த்திருந்தோம்.அதன் விபரம் இறுதிப்பகுதியில் காணலாம்.

ஒரு அடிப்படை தயாரிப்பு ஆகும். இவ் இணையத்தில் இனிவரும் பல உணவு தயாரிப்புகளிற்கு இது தேவையாக இருக்கும்.

அவற்றில் வரும் பெரும்பாலான மூலிகைகள் இதில் அடங்குகின்றன. சில மூலிகைகள் இந்த கூட்டில் தவிர்ப்பதற்கான காரணம் ,அவை கூடிய வாசனைத்தன்மை கொண்ட படியால் மற்றய மூலிகைகளின் வாசனையை மழுங்கடித்துவிடும் என்பதால் தவிர்க்கபட வேண்டியதாகின்றது.
உதாரணம்: புதினா : புதினா : Minzen : Mints : Menthes, கற்பூரவள்ளி : Oregano : Origan : Oregano

மேற்கு நாடுகளில் இவ் கலவையை பெரும்பாலான கடைகளில் உறைந்த நிலையிலும், தனித்தனியாக துளிந்த பச்சைஇலையாகவும் அல்லது காய்ந்த நிலையாகவும் வாங்ககூடியதாக இருக்கின்றது.

உறைந்த நிலையில் அல்லது தனித்தனியாக துளிர்ந்த பச்சைஇலையாகவும் வாங்கும் மூலிகைகள் மிக சிறந்ததாகும்.ஆனால் உலர்ந்த நிலையில் வாங்கும் மூலிகைகள் சுவை, மணம் வேறுபட்டது.

மூலிகைகூட்டு செய்முறை
kr'uter 3

சேர்க்க வேண்டிய மூலிகைகள்:

1. முனிவர்செடி : Salbei : Sage : Sauge

2. பசுமை மாறா செடி :Rosmarin :Rosmarin

3. மர்யுறான் :Majoran : marjoram :marjolaine

4. எஸ்ற்றாகோன் :Estragon : Tarragon : estragon

5. சதகுப்பி = Dill = aneth = Dill

6. வோக்கோசு : petersilie : parsley : persil

7. துமியான் :Thymiane : thyme : thym,

8. ஓமம் : துளசி : Basilikum : basil : basilic

மேற் குறிப்பிட்ட எல்லா மூலிகைகளில் சம பங்கு எடுத்து முதலில் குளிர் நீரில் அலசி கழுவி நீர்த்துளிகள் காயும்வரை காயவிடவும்.
காய்ந்த மூலிகைகளில் மென்மையான தண்டுடன் இலைகளை தடித்த தண்டில் இருந்து வேறாக்கவும்.
வேறாக்கிய இலைகளை இருவிதமாக பதப்படுத்தலாம்.

முறை 1.

வேறாக்கிய இலைகளை ஒரு கோப்பை வடிவான பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு எண்ணையுடன் சேர்த்து அரைத்து ஒரு போத்தலில் இடவும். அரைத்த முலிகைக்கு மேல் எண்ணைய் இருக்கும் வரை நிரப்பி குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கலாம்
தேவையேற்படும் பொது பாவித்து மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கலாம். 4 தொடக்கம் 5 வாரங்கள் உபயோகிக்க கூடியது.

முறை 2

வேறாக்கிய இலைகளை நல்ல கூரான கத்தியினால் சிறு துகள்களாக அரிந்து
எல்லா மூலிகைகளையும் ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அல்லது பையில் இட்டு உறைநிலையில் வைக்கவும்.
தேவையேற்படும் பொது பாவித்து மீண்டும் உறைநிலையில் பாதுகாக்கலாம். இம்முறை நீண்ட காலம் பாதுகாத்து உபயோகிக்க கூடியது.
குறிப்பு ஆனால் உறைநிலையில் இருந்து எடுக்கும் கூட்டை தேவையானதை எடுத்து விட்டு உடனே மீண்டும் உறைநிலையில் இடவேண்டும். இல்லாவிட்டால் அழுகிய தன்மையாக மாறி வாசனையை இழந்துவிடும்.

உண‌வை சுவையுட்டும் மூலிகை இலைவகைகள் !

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>