குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jun 27th, 2014 Comments: 0

ஸ்பக்ஹெட்டி உடன் வறுத்த காளானும் மூலிகைகூட்டும்.

Tags

Spaghetti with fried mushrooms in herb oil = Spaghetti mit gebratenen Pilze in Kräuteröl= Spaghetti aux champignons frits dans l’huile d’herbes

3 – 4 பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

500 g காய்ந்த அல்லது உடன்Spaghetti (கீழே நுாடில்ஸ் வகையை பார்க்கவும்.)
1Kg காள‌ான் ( விரும்பினால் பல வகை காளானையும் பயன்படுத்தலாம்)
1 லீக்ஸ்
5 பல் உள்ளி
1 சிறு வெங்காயம்.
3 மேசைக்கரண்டி மூலிகைகூட்டு ( கீழே உள்ள Link இல் பார்க்கவும்.)
50 ml ஒலீவன் அல்லது வேறு எண்ணைய்
20g வோக்கோசு 10g (parsley persil)
மற்றும் மிளகு துாள் , உப்பு, மரக்கறி சாறு (இருந்தால்)

செய்முறை

நூடில்ஸ் அவிப்பதற்கு நீரை உப்பிட்டு கொதிக்கவிடவும்.

காளானை ஒரு துணியால் மெல்லிதாக துடைத்து துண்டாக வெட்டவும்.
குறிப்பு: எக்காரணம் கொண்டும் நீரில் கழுவவேண்டாம். கழுவ வேண்டிய தேவையேற்படின் கழுவி குறைந்தது 2 -3 மணித்தியாலம் உலரவிட வேண்டும்.இல்லாவிடில் வறுக்கும் போது வறுபடாமல் நீர் தன்மையுடன் அவியும் தன்மையுடையதாகிவிடும்.

லீக்ஸ் சுத்தம் செய்து நீரில் கழுவி வடியவிடவும். பின் 5 சென்றிமீற்றர் அளவில் மெல்லியகீற்றாக வெட்டி வைக்கவும்.

வெங்காயம், வோக்கோசை ,உள்ளி சுத்தம் செய்து நீரில் கழுவி நன்றாக குறுணியாக வெட்டவும்.

மூலிகைகூட்டு செய்முறையை கீழே உள்ள Link இல் பார்க்கவும்.

கொதியும் நீரில் நூடில்ஸை இட்டு அவியவிடவும்.
குறிப்பு: நன்றாக அவியவிடாமல் ஒரு பதத்தில் வடியவிட்டு சிறிதளவு எண்ணையில் கலக்கவும். ஆனால் சரியான நேரத்தில் நூடில்ஸ் அவிந்தால் குளிர விடாமல் அப்படியே சேர்த்து கலக்கலாம்.

நூடில்ஸ் அவியும் நேரத்தில் ,ஓரளவு குழியான pபானை (Pan) ஓரளவு நன்றாக சூடாக்கவும்.
குறிப்பு ஏனெனில் சூடாகாத pபானில் காளானை இடும்போது வறுபடாமல் நீர் தன்மையுடன் அவியும் தன்மையுடையதாகிவிடும்.)

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில்காளானைபரந்து சட்டியில் இடவும்.
குறிப்பு :காளான் ஓரளவு வறுத்து வரும்வரை கரண்டியால்கிளறவேண்டாம்.

ஓரிரு நிமிடங்களில் வெங்காயத்தைஇடவும். அதன்பின் லீக் ,உள்ளி ஐ இட்டு வதக்கவும். சிலநிமிடங்கள் சென்றதும் மிளகு துாள் , உப்பு ஐ இட்டு கலந்து பிரட்டவும்.

வறண்டு வந்த பின் மூலிகைகூட்டை இட்டு கலந்தவுடன், நூடில்ஸையும்சேர்த்து பிரட்டியவுடனே அதன் மேல் சிறிதளவு நீரை தெளிர்த்து ( மரக்கறி சாறு மிகவும் சிறந்தது .கீழே உள்ள Link இல் பார்க்கவும்.)
நன்றாக கலந்தபின் வோக்கோசையும் சேர்த்து ஓரிரு நிமிடங்களில் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம்.

குறிப்பு:

அசைவம் உண்பவர்கள் காளானுடன் இறால், கணவாய், போன்றவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

நூடில்ஸ் Pasta

மூலிகைகூட்டு

மரக்கறி சாறு

]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>