வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
« Home »
Dez 17th, 2013 Comments: 0

*சிக்கன் நூடில்ஸ் ஆசியா ( Pasta Asia ; Pâtes Asie)

Tags

நான்கு பேருக்குரியது: தயாரிக்கும்நேரம்: 30- 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

காய்ந்த நுடில்ஸ் 400g
கோழி நெஞ்சுப்பகுதி 300g
கரட் 200g
லீக்ஸ் 200g
சிவப்பு குடை மிளகாய் 200g
சோயாமுளை 100g
மிளகு சிறிதளவு
வெங்காயம் 30g
உப்பு தேவையேற்படின் (சோயா சோஸ் உப்புதன்மையானது)
சோயா சோஸ் 3 மேசைகரண்டி
சீனி 1 மேசைகரண்டி
எண்ணெய் 5 மேசைகரண்டி
வோக்கோசு 10g (parsley persil)
கறிதூள் 1 தேக்கரண்டி

செய்முறை

நூடில்ஸ் அவிப்பதற்கு நீரை உப்பிட்டு கொதிக்கவிடவும்.
மரக்கறிவகைகளை சுத்தம் செய்து நீரில் கழுவி வடியவிடவும். பின் 5 சென்றிமீற்றர் அளவில் மெல்லியகீற்றாக வெட்டி வைக்கவும்

கோழியின் நெஞ்சுபகுதியை சுத்தம் செய்து 5 * 1சென்றிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.

வோக்கோசை நன்றாக குறுணியாக வெட்டவும்

கொதியும் நீரில் நூடில்ஸை இட்டு அவியவிடவும்.(நன்றாக அவியவிடாமல் ஒரு பதத்தில் வடியவிட்டு சிறிதளவு எண்ணையில் கலக்கவும்.)

நூடில்ஸ் அவியும் நேரத்தில் ,ஓரளவு குழியான pபானை (Pan) ஓரளவு நன்றாக சூடாக்கவும்.
(ஏனெனில் சூடாகாத pபானில் இறைச்சியை இடும்போது வறுகாமல் சட்டியில் ஒட்டிக்கொள்ளும்.)

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில் இறைச்சியை பரந்து சட்டியில் இடவும்.
(இறைச்சி ஓரளவு வறுத்து வரும்வரை கரண்டியால் கிளறவேண்டாம்.)

ஓரிரு நிமிடங்களில் வெங்காயம் ,கரட்டை இடவும். அதன்பின் மிளகாய் ,சோயாமுளை ,லீக் ஐ இட்டு வதக்கவும். சிலநிமிடங்கள் சென்றதும் கறித்தூள், சீனி , வோக்கோசு ஐ இட்டு கலந்து பிரட்டவும்.
பிரட்டியவுடனே நூடில்ஸை இட்டு அதன் மேல் சோயா சோஸை ஊற்றி நன்றாக கலந்தபின் ஓரிரு நிமிடங்களில் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம்.

குறிப்பு : கோழியின் நெஞ்சுப்பகுதி குறுகிய நேரத்தில் அவியும் தன்மை கொண்டது. மற்றும் உங்களுக்கு விரும்பிய மரக்கறிவகைகள் அல்லது நூடில்ஸ்வகைகளை மாற்றிகொள்ளலாம்

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>