இது மூலப்பொருட்களின் அடிப்படையில் பலமுறைகளில் தயாரிக்கப்படகின்றது. எமது உடலின் தேவைக்கு உகந்தமாதிரி தயாரிக்கலாம். இருந்தும் சில பொருட்கள் அடிப்படையானது. அதாவது எண்ணெய் , விநாகிரி அல்லது எழும்பிச்சம்பழசாறு, மிளகுத்துாள். உப்பு , மூலிகைகள் ஆகும்.
1. எண்ணெய் வகைகள் :
ஒலிவன்எண்ணெய், கடலைஎண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், முந்திரி , பூசணிவிதை எண்ணெய்
2.விநாகிரி அல்லது சாறு வகைகள்:
பல்ஸமிக்கோ விநாகிரி, தோடம்பழசாறு, எழும்பிச்சபழசாறு, தயிர்,
3.மூலிகைகள்:
வோக்கோசு (parsley, petersilie,persil ) , ஓமம்( basil ,basilikum,basilic), கொத்தமல்லிஇலை,பெருஞ்சீரகஇலை, Salvia,Salbei,sauge , Tarragon Estragon estragon dill aneth
மேலும் மூலிகைகளின் விபரங்களை வெறுவொரு பகுதியில்பார்ப்போம்.
4. மயோனைசே (mayonnaise) இது முட்டைமஞ்சள்கரு, எண்ணெய், உப்பு, மிளகுதுாள், கடுகுகளி (mustard,senf,moutarde) போன்றவற்றை கடைந்து தயாரிப்பது.
5. மற்றும் உப்பு, மிளகுதுாள், சீனி போன்றவையும்.
மேற்குறிப்பிட்ட மூலப்பொருட்களை மாறுபடுத்தி அடித்து கலக்கும் போது ஒவ்வொருவகையான Dressing தயாரிக்கலாம்.<

Hinterlasse eine Antwort