வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
Home *உணவு சமைப்பதற்கு முன்……!
« Home »
Nov 12th, 2013 Comments: 0

*உணவு சமைப்பதற்கு முன்……!

Tags

இருபது ஆண்டுகளிற்கு முன்னர் பெண்கள் சமைப்பதும், ஆண்கள் தொழில் புரிவதும், வெளிநடைமுறைகளை கவனித்தல் என ஒரு வாழ்க்கை நடைமுறையிருந்தது. தற்போது இருவரும் ஏதோவிதத்தில் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் சமையல் என்பது ஒரு துரிதகதியில் முடித்து, அடுத்த வேலைபழுவை ஏற்கவேண்டிய நிலையில் இருவரும் இருக்கின்றார்கள். எனவே இதை எப்படி சமாளித்து, எமது உணவுத்தேவைகளை விரைவில் நிறைவேற்றுவதென்பதை இங்கு பார்ப்போம்.
சமையல் என்பது ஒரு கலை. எங்களில் பலருக்கு அது ஒரு நிர்பந்திக்கப்பட்ட கடமையென நினைப்பதால் கசப்பாகிவிடுகின்றது. முதலில் விருப்பமுடன் சமையலறைக்கு போவதென்பது முக்கியமானது. சமைக்கும் போது உங்கள் மனநிலை சமையலில் ஆர்வமான நிலையில் இருக்கவேண்டும். என் சமையல் சுவையாக இருக்க வேண்டும் என்ற மனநிறைவாக இருக்கபாருங்கள். அதன்பிறகு பாருங்கள் நீங்கள் எப்படி சமைத்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.

இனி எப்படி விரைவாக சமைப்பதென்பதை பார்ப்போம்.

1.    திட்டமிடல் அத்துடன் உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள்.
முதலில் உங்களிடம் என்ன பொருட்கள் உள்ளன பார்த்து
ஓப்பிட்டு என்ன சமைப்பதென்பதை தீர்மாணியுங்கள்.

2.    தேவையானவற்றை வெளியில் எடுத்துவையுங்கள்.

3.    துப்பரவு செய்ய வேண்டியவற்றை துப்பரவு செய்தும் தோல் போன்றவற்றை சீவியோ அல்லது அகற்றியோ விடுங்கள்.

4.    பின்பு ஒரு பாத்திரத்தில் இட்டு நீரில் அலசி கழுவி வடிதட்டில்
வடியவிட்டுவிடுங்கள்.(இங்கு ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும் அதாவது எதையும் சிறுதுண்டாக வெட்டுவதற்கு அல்லது அரிவதற்கு முன்னம் கழுவிவிட வேண்டும். சிறுதுண்டாக வெட்டிய பின்பு எதையும் கழுவுவதை அல்லது நீரில் இட்டு வைப்பதை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் பொருட்களில் உள்ள விற்றமீன்கள், தாதுப்பொருக்கள் இழப்பதை தவிர்க்கலாம்.)

5.    பெருமளவு பாத்திரங்களையோ அல்லது பெரிய பாத்திரங்களையோ உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
ஏனெனில் பெரிய பாத்திரம் இடத்தை பிடித்து இடஞ்சலை தருவதுடன் துப்பரவு செய்யும் நேரத்தையும், நீரையும் மிக கூடுதலாக எடுக்கும். குறைவான பாத்திரம் எடுப்பதென்பது ஒருமுறை பாவித்த பாத்திரத்தை உடனே நீரில் அலசி அடுத்த பாவித்தலிற்கு தயார்படுத்தலாம். (நன்றாக கழுவ வேண்டிய அவசியம் இல்லைத்தானே.)

6.    எந்த உணவு கூடுதல் நேரத்தை சமைப்பதற்கு எடுக்குமோ அதை முதலில் தயார்படுத்தி சமைக்க தொடங்க வேண்டும்.
ஏனெனில் குறைவு நேரம் எடுக்கும் உணவை பிற்பாடு ஆரம்பித்தால் சமையல் முடியும் நேரம் ஒரே நேரமா இருக்கும்.

7.    சமைக்கும் போது எப்போதும் மூடி சமைக்கும் முறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் மூடி சமைக்கும் போது  பொருட்கள் விரைவாக வெந்துவிடும். ( சில விதிவிலக்கு உண்டு. உதாரணம் வறுவல் போன்றவை.) ஆனால் மூடி சமைக்கும் போது கொதித்து வெளியில் சிந்தும் என நினைக்கின்றீர்கள்தானே ? அதற்கு வழியிருக்கின்றது. அதாவது உணவு, பாத்திரத்தில் கொதிக்க தொடங்க 30 செக்கனிற்கு முன் அடுப்பின் வெப்பநிலையை பாதியாக்கி விடுங்கள். கொதித்தபின் கூடுதலான உணவுகளிற்கு தொடர்ந்து அவிய கூடுதல் வெப்பநிலை தேவையில்லை. அத்துடன் சக்தியையும் மிச்சம்பிடிக்கலாம். உதாரணம் சோறு, இறைச்சிகறி சமைத்தல்,
நூடில்ஸ்,மரக்கறி,உருளைக்கிழங்கு வகைகள் அவித்தல் போன்றவையாகும். மற்றும் எல்லா உணவுகளும் மிதமிஞ்சி அவித்து உண்பது என்பது நல்லதல்ல. அப்படி சமைக்கும் போது அவற்றில் உள்ள எல்லா சத்துக்களும் அழிக்கப்பட்டு
சக்கை என்று சொல்வார்களே அவைதான் இறுதியில் உங்களிற்கு கிடைக்கும்.

8.    சமையல் தொடங்கி அடுப்பில் பதார்த்தங்கள் இருக்கும்போது
தேவையில்லாதவற்றை அகற்றியும,; பாவித்த பாத்திரங்களை கழுவி, அருகே வடியவிடுங்கள். ஒவ்வொன்றாக கழுவி துடைப்பதை விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வடியவிட்டு துடைத்து வையுங்கள் ஏனெனில் உடன் உடன் துடைத்து வைக்கும்போது விரைவில் துண்டு ஈரமாகி பல துண்டுகள் தேவைப்படும்.

9.    சமைத்து முடிந்தவற்றை படிப்படியாக நீங்கள் சமைத்த உணவின் கொள்ளவிற்கேற்ற பாத்திரத்தில் இட்டுவிட்டு பாத்திரத்ததை உடனே கழுவி காயவிடுங்கள்.

10.    தற்போது சமையல் முடிந்து இறுதியாக கழுவிய பாத்திரமும்
அடுப்பும்தான் மிஞ்சி இருக்குதல்லவா. உடனேயே அவற்றை சுத்தம் செய்துவிடுங்கள். உண்ட பிற்பாடு என்பது தப்பான முடிவாகும். பிற்பாடு என்பது நீங்கள் சமைத்த களையை விட பன்மடங்காக  இருக்கும். அநுபவித்து பாருங்கள்.

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>