வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
Home »
Nov 11th, 2013 Comments: 0

*நூடில்ஸ் Pasta

Tags

எங்கள் நாட்டில் நூடில்ஸ் என்றால் ஒரு உறுண்டையான நீட்டாக இருக்கும். இதைதான் நூடில்ஸ் என்றும் அது சீனாநாட்டின் முறைப்படி தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கும்.
இது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஓரு விவாததிற்குரியது. மார்கோ போலோ 13 ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து மற்றய நாடுகளிற்கு அறிமுகப்படுத்தியதாக வரலாறு ஒன்று உண்டு. நூடில்ஸ் ஒவ்வொரு நாட்டின் செய்முறையினால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. பொதுப்படையாக Pasta என்ற இத்தாலிபெயருடன் தான் பிரபல்யமாக அழைக்கப்படுகின்றது.

கோதுமை (Wheat flour), உப்பு , தண்ணீருடன் தயாரிக்கப்படுகின்றது . பெரும்பாலும் இதனுடன் முட்டையும் சேர்க்கப்படுகின்றது.

முட்டையில்லாத  நூடில்ஸ் பெரும்பாலான கடைகளில் வாங்கலாம்.  கோதுமையல்லாத ,கடின கோதுமையென அழைக்கப்படும் (Hard wheat flour)  இல் தயாரிக்கும் நூடில்ஸ் வகைகள் முட்டையில்லாமல்தான் தயாரிக்கப்படுகின்றன. (Hard wheat flour  மிகவும் மென்மையான  பசையுடனான தானிய மற்றும் குறைந்த புரத உள்ளடக்கம் கொண்டது.)

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலி நாடுதான் நூடில்ஸ் வகைகளிற்கு பிரபல்யமானது.

Egg noodle, Wheat noodle, Glass noodle ,Rice noodle   என வித்தியாசமான மூலபொருட்களைக் கொண்டும் அதன் உருவ வடிவ அமைப்புக்களை கொண்டு பலதரப்பட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட நூறு வகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. எல்லா நூடில்ஸின் செயன்முறைகளும் 90 வீதம் ஒரேமாதிரியானவை. அவற்றின் வடிவங்கள்தான் மாறுபடுகின்றன.

இனிவரும் தொடர் உணவுவகைகளில் பொதுப்படையாக பஸ்ரா என்ற பதத்தை பாவிப்போம். நீங்கள் எந்த விதமான நூடில்ஸ் வகைகளையும் தெரிவுசெய்யலாம். பெரும்பாலான உணவகங்களில் தயாரிக்கப்பட்ட நூடில்ஸ்வகைகளைதான் உபயோகப்படுத்துகின்றனர்.

Rice noodle  பெரும்பாலும் தென்சீனாவில் அரிசிமாவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

Glass noodle   பெரும்பாலும் அவரைமாவை (Starch) அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

மற்றும் பச்சைநூடில்ஸ் கீரைபசை கலந்தும், கறுப்பு நூடில்ஸ் கணவாய்மை கொண்டும் , சிவப்புநூடில்ஸ் தக்காளிபசை கொண்டும்,  நிறமூட்டப்படுகின்றது.

உள்ளுடனானது கீரை, காளான், இறைச்சி, பாலாடைகட்டி (Cheese),  மரக்கறி, மீன் , இறால் வகைகள் , ஒலீவ் , கடலைவகைகள்  என சேர்த்து அரைத்து நடுவில் வைத்து தயாரிக்கப்படுகின்றது.

 

இதில் பிரல்பயமான பெயர்களையும் அவற்றின் வடிவங்களையும் பார்ப்போம்.

Anelli :        மோதிரவடிவமயனது

Bavette :     மெல்லிய நீளமான தட்டையானது.

Bucatini :    மொத்தமான நீளமான குழாய் வடிவமானது.
Cannelloni:  கட்டையான மொத்தமான குழாய் வடிவமானது.
Farfalle :      வண்ணாத்திபூச்சி வடிவமானது.
Funghini :    சின்ன காளான் வடிவம்
Gnocchi:      சிப்பி வடிவம் .
Lasagne       தட்டையான அகலமானது
Linguine:     நீளமான மொத்தமான மெல்லிய தட்டையானது.
Makkaroni:   மெல்லிய வளைவான குழாயான கட்டை வடிவமானது.
Pastina:       மெல்லிய சின்னஞ்சிறியது. (சூப்நூடில்ஸ்)
Penne:         வரிகொண்ட குழாய் வடிவான கட்டையானது.
Ravioli :       உள்ளுடன் கொண்ட தட்டையான சதுரவடிவம்
Spaghetti :   மெல்லிய உருண்டையான நீளமானது.
Spaghettini:  மிக மெல்லிய உருண்டையான நீளமானது.
Tagliatelle:    மெல்லிய 1 சென்றிமீட்டர் அகலம் கொண்டது
Tortellini:     சிறிய உள்ளுடன் கொண்ட சுருட்டப்பட்ட வடிவம்
Tortelloni:    நடுத்தர உள்ளுடன் கொண்ட சுருட்டப்பட்ட வடிவம்

மற்றய நூடில்ஸ் பெயர்களையும் வடிவங்களையும் தொடர்ந்து வரும் உணவுகளுடன் தர முயல்கின்றோம்.கீழே நூடில்ஸ்களின் வடிவமும் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

நூடில்ஸ் செய்யும் முறை: 1

மூலப்பொருட்கள்:

மா                 400g
முட்டை         4
எண்ணைய்     2 மேசைக்கரண்டி
உப்பு               தேவையான அளவு. (ஒரு தேக்கரண்டி)

நூடில்ஸ் செய்யும் முறை: 2

மூலப்பொருட்கள்:

Hard wheat flour    400 g
எண்ணைய்           3 மேசைக்கரண்டி
உப்பு                     தேவையான அளவு. (ஒரு தேக்கரண்டி)
சுடதண்ணீர்           200 – 250 ml

நூடில்ஸ் செய்யும் முறை: 3

மூலப்பொருட்கள்:
மா                           200g
கோதுமை குறுணி     150g  (Semolina)
உப்பு                        தேவையான அளவு. (ஒரு தேக்கரண்டி)
எண்ணைய்               4 மேசைக்கரண்டி
தண்ணீர்                   160 – 200 ml

செய்முறைகள்:

மாவை உப்பையும் கலந்து அரிதட்டில் அரிக்கவும். அரித்தமாவை ஒரு தொட்டி போல் கட்டுங்கள். அந்த தொட்டிக்குள் எண்ணையுடன் முட்டைகளை உடைத்து விடுங்கள். வெடுக்கு தன்மையை தவிர்ப்பதற்காக, முட்டை உடைக்கும் போது கவனமாக முட்டையில் கருவுடன் வரும் சவ்வை அகற்றி தொட்டியினுள் இடவும்.
அதன்பின் விரல்களினால் தொட்டியின் உட்பக்கத்தால் மாவையும் முட்டையையும் படிபடியாக முழுவதையும் குழைத்து கலந்தவுடன் நன்றாக 10 நிமிடம் உருட்டி பிசையவும்.
அதன்பின் நூடில்ஸ்மா காயாமல் பொலித்தீன் தாளால் மூடி  30 நிமிடங்கள் வைக்கவும். அதன்பிற்பாடு மாவை நூடில்ஸ் மசீன் அல்லது கையால் ரொட்டி உருட்டுவது போல மா தூவி இருபக்கங்களும் மாறிமாறி நீளமாக மெல்லியதாக வரும் வரை உருட்டி தட்டையாக்கவும். அதன்பின் உங்களுக்கு விரும்பியபடி வடிவமாக வெட்டவும்.

 

நூடில்ஸ் அவிக்கும் முறை :

நீங்களாக தயாரித்த அல்லது வாங்கிய Fresh நூடில்ஸ்
தேவையான கொதிநீரில்
2 – 3 நிமிடங்கள்
8 – 10 நிமிடங்கள்  உள்ளுடன் உள்ள வகைகள்.

கடையில் வாங்கிய காய்ந்த நூடில்ஸ் வகைகள்
தேவையான கொதிநீரில்
8 – 12 நிமிடங்கள்
15 – 20 நிமிடங்கள்  உள்ளுடன் உள்ள வகைகள்.

நூடில்ஸ் இன் மொத்தம், வடிவத்தை கொண்டு அவியும் நேரங்கள் மாறுபடும்.

நீங்கள் தயாரித்த Souce இல் உடன் போட்டு கலக்கலாம். அல்லது சிறிது நேரத்தில் பாவிப்பதென்றால் சிறிதளவு எண்ணை கலந்து வைக்கவும். பிற்பாடு பாவிப்பதென்றால் குளிர்நீரில் குளிராக்கி சிறிதளவு எண்ணை கலந்து வைக்கவும்.

கீழே நூடில்ஸ்களின் வடிவமும் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

File:Pasta 2006 1.jpg

File:Pasta 2006 2.jpg

File:Pasta 2006 3.jpg

File:Pasta 2006 4.jpg

File:Pasta 2006 5.jpg

File:Pasta 2006 6.jpg

File:Pasta 2006 7.jpg

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>