வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
« Home »
Nov 11th, 2013 Comments: 0

*உருளைக்கிழங்கு சூப்

Tags

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு            500 g
லீக்ஸ்                            1
பால்                               2 Liter
பாலாடை                       500 ml  (Doublecream)
உள்ளி                             2 பற்கள்
உப்பு                               தேவையான அளவு
மிளகுதூள்                       சிறிதளவு
சாதிக்காய்                       மிக மிக சிறியளவு
முலிகையிலைகள்          Parsley , basil  ஒவ்வொரு கிளை

செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி தண்ணீரில் இடவும். லீக்ஸ் ,உள்ளி, முலிகையிலைகளை துப்பரவாக்கி கழுவவும். உருளைக்கிழங்கு, லீக்ஸ் ஐ சிறுதுண்டாக வெட்டவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு உருளைக்கிழங்கு,  லீக்ஸ், உள்ளி, உப்பு ,மிளகுதூள் ,சாதிக்காய்தூள்  போன்றவற்றை அப்பாத்திரத்தில் இட்டு அவியவிடவேண்டும்.
மூலிகையிலைகளை நன்றாக அரிந்து வைக்கவும். உருளைக்கிழங்கு அவிந்தபின் அடுப்பில் இருந்து எடுத்து நன்றாக மசிக்கவும் அல்லது மிக்ஸரால் மசிக்கவும். அதன்பிற்பாடு பாலாடை, மூலிகையை இட்டு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து எடுக்கவும். உருளைக்கிழங்கின் பசை தன்மைகள் வேறுபடும் தன்மை கொண்டதால் சில நேரங்களில் இறுக்கமாகவோ அல்லது தண்ணித்தன்மையாகவும் இருக்கலாம். இறுக்கமாகவிருந்தால் பாலை விட்டு இலகுவாக்கலாம். தண்ணித்தன்மையாகவிருந்தால் ஒரு தேக்கரண்டி மாவும் வெண்ணையும் (Butter) பிசைந்து இட்டால் சூப் இறுக்கமாகும். தற்போது சூப்பை உருசிபாத்து தேவையெனில் உப்பிட்டு பரிமாறலாம்.

இவ் சூப்புடன் இறால், மீன்துண்டுகள், அல்லது வேறு உங்களிற்கு பிடித்தமானவற்றை வறுத்தோ , பொரித்தோ இட்டு பரிமாறலாம்.

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>