வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
« Home »
Nov 11th, 2013 Comments: 0

*மரக்கறி வகைகள்

Tags

மரக்கறிவகைகள் உடலுக்கு மிக முக்கியமானது. உடலுக்கு தேவையான விற்றமீன்கள், தாதுபொருட்கள், நார்சத்துக்கள் என பல வகைகளிலும் முக்கியமானது. கிழங்குவகைகள் , இலைவகைகள், பருப்புவகைகள், காய்கறிவகைகள் என பலவிதமாக பிரித்து வகைபடுத்தலாம். சிலவற்றை தாவரவியல்படி பழங்களாகவும் அழைக்கப்படுகின்றது. உதாரணமாக  தக்காளிப்பழம், அவக்காடோ, செரிவகைகள், விதைகொண்ட பழங்கள் எனலாம்.
அவற்றை பயன்படுத்தும் முறைகளை வேறுபடுத்தி பல சுவையான உணவுகளை தயாரிக்கலாம். நீரில் அவித்து , வறுத்து, பொரித்து அல்லது நீராவியில் அவித்து உணவுகளை தயாரிக்கலாம்.
உணவு தயாரிக்கும் பொழுது சிலவற்றை அவதானத்தில் எடுத்தகொள்வது சிறந்ததாகும்.

1.    மரக்கறிவகைகளை  நிரில் கழுவுவதற்கு முன்னம் சுத்தம் செய்யவெண்டும்.பின்பு உங்களிற்கு தேவையான அளவில் துண்டாகவோ அல்லது வடிவமாகவெட்டவேண்டும். இதனால் விற்றமீன், தாதுப்பொருட்கள் தண்ணீரில் இழப்பதை தடுக்கலாம்.

2.    மரக்கறிவகைகளை பதப்படுத்திய பின் உடன் பரிமாறாமல் இருத்தால்     குளிர்தண்ணீரில் உடன் குளிர்படுத்தவேண்டும். ஏனெனில் விற்றமீன்கள், தாதுப்பொருட்கள், அவற்றின் நிறங்கள் போன்றவற்றை இழப்பதை தவிர்க்கலாம்.

3.    பொருத்தமான மரக்கறிவகைகளை தேர்வு செய்து தயாரித்தால் உணவின் சுவையினை இன்னும் மெருகூட்டலாம்.

4.    பலவிதமான நிறங்களில் தெரிவு செய்தால் பரிமாறும் பொது அழகாகவும் ஒரு ஆர்வமான நிலைப்பாட்டையும் கொடுக்கும்.

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>