குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 26th, 2014 Comments: 0

Ratatouille = றற்ரறுஃலி

Tags

Ratatouille இது ஒரு உலக புகழ்பெற்ற பிரஞ்சு துணையுணவாகும். ஆனால் சைவஉணவு உண்பவர்கள் முக்கிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். எல்லா உணவுவகைகளிற்கும் பொருந்தக்கூடியது இதன் சிறப்பாகும். இது தயாரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட மூலப்பொருட்கள் மட்டும் பாவிப்பது ‌ அதன் பொருளடக்கமாக கருதப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

700g கத்திரிக்காய் = Aubergine = Eggplant= Aubergine
700g சிவப்புகுடைமிளகாய் = Paprika = Bellpepper = Poivre
700g சீமை சுரைக்காய் = Zucchini = courgette
500g தக்காளி = Tomaten = Tomatoes= Tomates
300g வெங்காயம்= Zwiebel = Onion= Oignon
50g பூண்டு= Knoblauch= Garlic =ail
25g மூலிகைகூட்டு = kräuter = herbs = herbes
25ml எண்ணெய் (எந்தவகையானதும்)
10g வோக்கோசு = (parsley = persil)
அத்துடன் மிளகுதுாள் , உப்பு ,சிறிதளவு சீனி ,தேசிக்காய்சாறு .

செய்முறை:

முதலில் வெங்காயம் , உள்ளி போனறவற்றை சுத்தம் செய்வதுடன் மற்றய மரக்கறிவகைகளை நீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.

வெங்காயத்தை அரை‌ சென்ரிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.
உள்ளி ,வோக்கோசு மற்றும் மூலி‌கைகளை குறுனியாக வெட்டிவைக்கவும்.
மரக்கறிவகைகளை 1 சென்ரிமீற்றர் அளவில் வெட்டிவைக்கவும்.
தக்காளியை நான்கு பாகமாக வெட்டி விதை மற்றும் நீர் பகுதிகளை அகற்றி 1cm துண்டுகளாக வெட்டவும்.

சூடான சட்டியில் அரைபகுதி எண்ணையை இட்டு சூடானதும் கத்திரிக்காய் தவிர்த்து சிவப்புகுடைமிளகாய், சீமை சுரைக்காய் இட்டு வதக்கவுடன் இரு நிமிடங்களின் பின் வெங்காயம் ,உள்ளி, மூலிகைகூட்டை இட்டு தொடர்ந்து வதக்கவும்.

(குறிப்பு: சட்டியை நல்ல சூட்டில் வைத்திருந்தால் நன்று. ஏனெனில் குறைந்த சூட்டில் இருந்தால் பொருட்கள் வதங்காமல் அவியும் தன்மையாகி சாறு உருவாகும்.)

அரைபதம் வரும்போது தக்காளி இட்டு தொடர்ந்து வதக்குவதுடன் மிளகுதுாள் , உப்பு ,சிறிதளவு சீனி தேசிக்காய்சாறு இட்டு கலந்து வதக்கி ஒரு தட்டையான பாத்திரத்தில் பரப்பி இடவும்.

மீண்டும் சூடான சட்டியில் மிகுதிபகுதி எண்ணையை இட்டு சூடானதும் கத்திரிக்காயை இட்டு தொடர்ந்து சாப்பிடும் தன்மை வரை வதக்கிய பிற்பாடுமுதல்பகுதியின் மேல் பரப்பி போடவும். பின் குறுனியாக வெட்டிய வோக்கோசு அதன் மேல் துாவிவிடவும்.

(குறிப்பு: கத்தரிக்காயை முதல் பகுதியுடன் இணைத்து வதக்கலாம். ஆனால் ஒரு அழகான உணவாக அது இருக்காத படியினால் தனிய வதக்குவதே சிறந்தது.)

குறிப்பு: இவ்வுணவை சோற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். அல்லது ஏதாவது இறைச்சி, கடல்உணவுவகைகளுடனும் இணைத்து பரிமாறலாம். Sauce தேவையற்றது.

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

ratatouille

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>