குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 5th, 2014 Comments: 0

Tortellini உடன் கீரை = mit spinat = with spinach = avec épinards

Tags

தேவையான பொருட்கள்:

500 g துளித்த கீரை அல்லது உறைநிலை கீரை
1 கிலோ ரொற்றலினி Tortellini அல்லது வேறு Pasta
(நூடில்ஸ் என்று கீழ் வரும் பக்கத்தில் விளக்கம் உள்ளது.)
100g வெங்காயம் = Zwiebel = Onion= Oignon
300ml தடித்த பாலாடை கிரீம் = Sahne =double cream = crème à double
350ml பால்
5 தேக்கரண்டி எண்ணைய்
25g வெண்ணெய் Butter = beurre
25g வெள்ளை மா
25g பூண்டு Knoblauch= Garlic =ail
சிறிதளவு சாதிக்காய் தூள் = Muskat = Nutmeg =noix de muscade
தேவையான அளவு உப்பு
சிறிதளவு மிளகு
25g மூலிகைக்கூட்டு ( மூலிகைக்கூட்டு செய்முறையை பார்க்கவும்)
பாதி தேசிக்காய்

செய்முறை:

முதலில் வெங்காயம் இகீரை, உள்ளி போனறவற்றை சுத்தம் செய்வது நீரில் இட்டு கழுவி ஒரு பாத்திரத்தில் வடியவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவிடுங்கள். நீர் கொதித்ததும் கழுவிய கீரையை அதில் இட்டு இருநிமிடங்கள் ஆனதும் வடி கரண்டியால் எடுத்துகுளிர்நீரில் இட்டு குளிர்ந்ததும் ஒரு வடியில் இட்டு வடியவிடுங்கள்.
குறிப்பு , குளிர்நீரில் இட்டு வடிய வைப்பதனால் கீரையில் உள்ள சத்துக்கள், நிறம் மாறாவிருக்கும்.
உறைநிலை கீரை என்றால் முதலே இளக விடுங்கள்.
Pasta அல்லது Tortellini யை அவிப்பதற்கு நீரை உப்பிட்டு கொதிக்கவிடவும்.
Pasta அல்லது Tortellini யை கொதியும் நீரில் நூடில்ஸை இட்டு அவியவிடவும்.
(குறிப்பு நன்றாக அவியவிடாமல் ஒரு பதத்தில் வடியவிட்டு சிறிதளவு எண்ணையில் கலக்கவும்.) நூடில்ஸ் என்று கீழ் வரும் பக்கத்தில் விளக்கம் உள்ளது.
கீரையை சிறியதாக வெட்டவும்.
வெங்காயத்தை ஓரளவு குறுனி அளவில் வெட்டிவைக்கவும்.
உள்ளி , வோக்கோசு மற்றும் மூலிகைகளை குறுனியாக வெட்டிவைக்கவும்.

பெஸமெல் சோஸ் . (Bèchamel sauce ) செய்முறை

சூடான சட்டியில் எண்ணையை இட்டு சூடானதும் முதலில் உள்ளி , வெங்காயத்தை இட்டு வதக்கவும். ஓரளவு வதங்கியதும் சட்டியை அடுப்பில் இருந்து விலக்கி வெண்ணையை இட்டு இளகியதும், மாவை சேர்த்து கலந்து , மீண்டும் அடுப்பில் வைத்து பாலை இட்டு கலக்கியால் கலக்கவும். அத்துடன் மிளகு, சாதிக்காய்தூள், உப்பு ஐயும் இடவும்.பாலுடன் சூடாகும் போது தடித்த கூழான சோஸ் உருவாகும்.

குறிப்பு: சோஸ் சூடாகும் பொழுது ,சட்டி அடிபிடிக்கும் தன்மையடையாமல் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பெஸமெல் சோஸ் என்று அழைக்கப்படுகின்றது. (Bèchamel sauce )

தயாரித்த பெஸமல் சோஸிற்குள் தடித்த பாலாடை மூலிகைக்கூட்டு கீரை இட்டு கொதித்ததும் உங்களிற்கு ஏற்றாற் போல் உப்பிட்டு தேசிக்காய் சாறையும் சேர்க்கவும். கொதித்த சோஸிற்குள் அவித்து வைத்த Pasta அல்லது Tortellini ஐ இட்டு ஓரு முறை அவிந்ததும் உடனேயே உண்பதற்கு ஏதுவாகின்றது. தேவையேற்படின் பாலாடை மேலும் சேர்க்கலாம்.

குறிப்பு :இதனுடன் மரக்கறி சாறு (கஞ்சி = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumesஇருப்பின்) கலந்தால் கூடிய சுவையும் , சத்தும்கொண்டதாகவிருக்கும். தேசிக்காய் சாறை கலக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் பால்பதார்த்தத்தை திரைய வைக்கும் தன்மை கொண்டது.

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

*நூடில்ஸ் Pasta

மரக்கறி சாறு (கஞ்சி) = Gemüse brühe = Vegetable broth = bouillon de légumes

*****

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>