நெடுங்காலம் மருத்துவம் மூலம் எமது மூலிகைகள் உலகில் எல்லா பாகங்களிலும் பிரபல்யமானது. ஆனால் நாம் அவற்றை மருத்துவத்துடனேயே விட்டு விட்டோம். ஆனால் நாம் அன்றாடம் உணவுவகைகளில் சில மூலிகைவகைகளின் விதைகளை அல்லது தானியங்களை பயன்படுத்தி வருகின்றோம். கறிவேப்பமிலை,
இரம்பையை , கொத்தமல்லியிலை எடுத்துக்கொண்டு மிகுதியை மறந்துவிட்டோம்.
ஆனால் மேற்குலகில் கூடுதலாக மூலிகைகளின் காயாத இளமையான இலைவகைகளைத்தான் உணவுவகைகளில் சேர்த்து தயாரித்து உண்ணுகின்றார்கள்.
ஏனெனில் சுவை,நறுமணம்,கனிவளம் போன்றன இழக்காமல் எம்மை வந்தடைகின்றன. பத்துக்கு மேற்பட்ட மூலிகை இலைவகைகள் பெரும்பாலான உணவுவகைளில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த இணையத்தில் வரும் கூடுதலான உணவுத்தயாரிப்புகளிற்கு முக்கியமாகின்றது.
இயன்றளவிற்கு தமிழில் அதன் பெயர்களையும் அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன் மொழிகளில் தர முயற்சிக்கிறேன்.தவறுதலான மொழிபெயர்த்திருப்பின் தயவுசெய்து அறியப்படுத்தவும்.
படத்தின் மேல் உள்ள இணைப்பை அழுத்தும்போது மேலதிக விபரங்கள்
*ஓமம் : துளசி : Basilikum : basil : basilic
துாமியான் :Thymiane : thyme : thym,

Hinterlasse eine Antwort