உலகத்தில் வாழும் எந்தவொரு உயிரினங்களிற்கோ அல்லது தாவரங்களிற்கோ ஆகாரம் அல்லது திரவமோ இல்லாமல் உயிர்வாழ முடியாது என்பது இயற்கையின் நியதி. மனிதனை தவிர மற்றவையெல்லாம் இயற்கையில் எப்படி கிடைக்கின்றதோ அப்படியே உண்ணக்கூடிய நடைமுறையை பின்பற்றி வருகின்றன. ஆனால் மனித இனமோ தன் பரிணாமவளர்ச்சி, கலாச்சாரம், மதம், காலநிலை, தன்நாட்டுவளம் என அடிப்படையை கொண்டு தங்கள் உணவு,
பாணங்கள்
அவற்றின் சுவை,
தயாரிக்கும் முறை,
எப்படி உட்கோள்வது,
எந்த நேரத்தில் என்ன உட்கொள்வது
எதனுடன் இணைத்து உட்கொள்ளுவது,
எந்தகாலத்தில் எத்தகைய உணவுகள் சிறந்தது,
தன்னுடலுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து உண்பது
என தங்களை தாங்களே தயார்படுத்திக்கொண்டார்கள். அத்துடன் அதிதீவிர விஞ்ஞான வளர்ச்சியால் வௌ;வேறு உணவுமுறைகளை தேடத்தொடங்கி தங்களுக்கு தேவையான பிடித்தமான உணவுகளை உண்ண ஆரம்பித்து உலகலாவிய ஆகார முறைக்கு வந்துள்ளார்கள்.
இந்த நடைமுறையின் அடிப்படையாகவும், மேற்குறிப்பிட்ட மனிததேவைகளையும் தரம் பிரித்தும், அவற்றின் தன்மைகள், மூலப்பொருட்களின் அடிப்படைகள் என பிரித்து ஒவ்வொன்றாகவும் படிப்படியாகவும் முழுமைபடுத்துவோம

Hinterlasse eine Antwort