இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா,மத்தியதரைக்கடல் என கருதப்படுகிறது. சாம்பல் கலந்த பச்சையான மிக சிறிய இலை. மிகசிறந்த கடுமையான வாசனையுடையது. எல்லா உணவுகளிற்கும் பொருந்த கூடியது. தக்காளி, போஞ்சி,பருப்பு, இறைச்சி வகைகளிற்கு மிக சிறந்தது. புளிப்பு, உறைப்பு சேர்ந்த சுவையுடையது. சமைக்கும் போதே சேர்த்து சமைக்க வேண்டும்.அதிகூடிய வாசனையுடையதால் குறைந்த அளவில் பாவிக்கவேண்டும்.
எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம். வாசனை கூட இழக்கும் தன்மையற்றதனால் உலர்த்தியும் பாதுகாக்கலாம்.
உலர் தளங்கள் மற்றும் உலர் புல்வெளிகள்,யன்னல் மற்றும் சுவர்களில், சாலையோரங்களில்,தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

Hinterlasse eine Antwort