1. முதலில் என்ன பொருட்கள் தேவையென்பதை கடைக்கு போகமுன் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். சமையலறையில் ஒரு குறிப்புபுத்தகம் வைத்திருந்து பொருட்கள் முடியும் போது குறித்துவைத்தால் கடைக்கு போகும் போது பதட்டமில்லாமல் இருக்குமல்லவா.
2. வாரத்தில் ஒருமுறை பொருட்கள் கொள்வனவு செய்யும் முறையை கடைப்பிடித்தால்
அ. உங்கள் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
ஆ. தேவையில்லாத செலவினை தவிர்க்கலாம்.
இ. வாரத்தில் இறுதிநாட்களில் இருக்கும் பொருட்களை வைத்து
உணவுதயாரிக்கும் பொழுது உங்கள் குளிர்சாதனபெட்டியில்
உள்ள இடங்கள் வெற்றிடமாகும்.
ஈ. அடுத்த கிழமை வாங்கும் பொருட்கள் புதியதாகவும்
விற்றமீன்கள் இழக்காததாகவும் இருக்கும். பொருட்கள்
நாட்கள் செல்ல செல்ல அவற்றில் உள்ள விற்றமீன்கள்
கனிவளங்கள் இழக்கப்படுகின்றன.
3. தற்போது எந்த பொருட்களின் அறுவடைகாலம் என தெரிந்து
அவற்றை வாங்கும் போது இளமையாகவும், மலிவானதாகவும்
இருக்கும்.
4. வாங்கிய பொருட்களை தரம்பிரித்து தேவையில்லாத பெட்டிகளையோ , பொலித்தீன் பைகளை அகற்றி, ஒத்த பொருட்களை ஒரு இடமாகவும், வைத்தால், அப்பொருட்களை
எடுப்பது சுலபமாகவும், அவற்றிற்கேற்ற வெப்பநிலையில் பாதுகாப்பதும் சிறந்ததாகும்.
5. பொருட்கள் பெருந்தொகையாக வாங்கும்போது சிலநேரம் மலிவாக கிடைக்கும். ஆனால் அது உங்களிற்கு பொருந்துமா என ஆலோசித்தபின் வாங்குங்கள். ஏனெனில் வாங்கிய பொருட்கள் உபயோகபடுத்தாமல், நாட்பட்டு எறியவேண்டிய நிலை ஏற்பட்டால் வாங்கிய விலை அதிகமாகிவிடுமல்லவா

Hinterlasse eine Antwort